பொது சிவில்
சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370, பாபர் மசூதி ஆகிய பிரச்சினைகளைப் பற்றி
பேசாவிட்டால் நரேந்திர மோடி பிரதரமராவதில் தவறில்லை என்று தமிழ் வணிகரும் புதிய
அரசியல் தரகருமான தமிழருவி மணியன் அருள் வாக்கு கூறினார்.
நேற்று முன்
தினம் காஷ்மீரில் நடைபெற்ற கூட்டத்தில் 370 ம் பிரிவு பற்றி விவாதம் வேண்டும்
என்றும் அச்சட்டப் பிரிவால் சாதாரண இந்தியனுக்கு என்ன பயன் என்றும் கேட்டுள்ளார்.
பழைய
பழமொழியாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் வேறு வழியில்லாமல் அதைத்தான் சொல்ல வேண்டியுள்ளது.
நாய் வாலை
நிமிர்த்த முடியாது.
மக்கள்
மத்தியில் பிரிவினையை தூண்டும் இக்கோஷங்களை பாரதீய ஜனதாவும் எப்போதும் கைவிடாது.
மோடி இப்போது
370 ம் பிரிவைப் பற்றி பேசத் தொடங்கி விட்டார். இனி ஒவ்வொன்றாக வரும். காஷ்மீர்
இந்தியாவுடன் இணைந்தபோது அளிக்கப்பட்ட
உறுதிமொழிகள் எல்லாமே நீர்த்துப் போய்விட்டது. அதற்கான குற்றவாளி காங்கிரஸ்
கட்சிதான். சாரம் பறிபோய் வெறும் சக்கை மட்டுமே உள்ளது. அதையும் பறிக்க பாஜக
பார்க்கிறது.
ஆக பாம்பு
படமெடுக்க தொடங்கி விட்டது. பாம்பாட்டி தமிழருவி மணியன் எங்கே போய் விட்டார்? அவர்
இப்போது என்ன சொல்லப் போகிறார்? நீ ரொம்ப நல்லவன், அப்படியெல்லாம் பேசாதே என்று
மகுடியெடுத்து மோடியிடம் கெஞ்சப் போகிறாரா?
பாம்பால்
கடிபட்டு இறந்த பாம்பாட்டிகளும் இருக்கிறார்கள் அல்லவா?
தமிழருவி
மணியன் ஐயா ஜாக்கிரதையா இருங்க.
No comments:
Post a Comment