Saturday, December 14, 2013

அதிரடியாய் ஒரு அனுபவம்



சுலபமாகவும் எளிதாகவும் செய்யக் கூடிய ஒரு உணவு அவல் உப்புமா. தேங்காய் சேர்த்தோ அல்லது மிளகுப் பொடி சேர்த்தோ செய்வது என்பது வழக்கமான முறை.

ஒரு அதிரடியான மாற்று ஒன்றை முயற்சித்தேன்.

முதலில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு வெடித்த பின்பு பாதி உளுத்தம்பருப்பை போட்டு வறுத்த பின்பு பொடியாக நறுக்கிய வெங்காய்ம், காரட், குட மிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு வதக்கவும். பிறகு கொஞ்சம் வேர் கடலையையும் நன்கு வறுத்துக் கொள்ளவும். கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த வேலையை துவக்கும் முன்பாக கெட்டி அவலை தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அவலை பிழிந்து எடுத்து இந்த கலவையோடு சேர்த்து நன்றாக கிளறி எடுத்து சாப்பிடவும்.

தயார் செய்து சாப்பிட்டு விட்டு எப்படி உள்ளது என்று சொல்லவும்.




வித்தியாசமான சுவையாக நன்றாக  இருக்கும் என்பதற்கு நான் கேரண்டி.

6 comments:

  1. ஆஹா ! கெளம்பிட்டாருப்பா எங்க நள மஹா சக்கரவர்த்தி ! நாளை காலை இதுதான் என் வீட்டு டிபன்.

    ReplyDelete
  2. Thambi, why are you not making comments in others blog?

    ReplyDelete
  3. உங்களுக்கோ இது ஒரு அதிரடியான மாற்று தீர்வு. எனக்கோ சுலபமா செய்யகூடிய சுவையான உணவு நன்றிங்க.

    ReplyDelete
  4. 48 வயசுக்கு மேல இருக்கிற அனானி அண்ணே, நேரம்தான் பிரச்சினை.
    நீங்க ஏதாவது ப்ளாக் எழுதறீங்களா, சொல்லுங்க தைரியமா. அனாமதேயமா வராம என் பெயரிலேயே கமெண்ட் போடறேன்.

    அடையாளத்தை மறைக்கறவங்களுக்கு அட்வைஸ் செய்யற அருகதை கிடையாது

    ReplyDelete
  5. கோபி, நீங்களும் கிளம்பிட்டீங்களா கலாய்க்கறதுக்கு

    ReplyDelete
  6. வேகநரி சார் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க

    ReplyDelete