Sunday, December 22, 2013

ரஜனியை விழுங்கிய சூப்பர் ஸ்டார்

 http://i1.ytimg.com/vi/UzI95PVJ0P4/movieposter.jpg?v=506d73a6

இன்று காலை மிகவும் மோசமாக தொடங்கியது. அரக்கோணம்
செல்ல வேண்டும் என்பதற்காக அவசரமாக எழுந்ததில் காலில்
நரம்பு இழுத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் சரியான
வலி. கடைசியில் அரக்கோணம் செல்வதையே ரத்து செய்ய
வேண்டியிருந்தது.

அந்த வலி மதியம் மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. வேறு
வழியில்லாமல் காலை நீட்டிக் கொண்டு  ஏதோ ஒரு தொலைக்காட்சி 
சேனலில்  இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் கடைசி நிமிடங்கள்.

எவ்வளவு சிறப்பாக, இயல்பாக ரஜனிகாந்தின் நடிப்பு அந்த 
உச்சகட்ட காட்சிகளில் அமைந்துள்ளது.... கூடவே ராஜாவின்
பின்னணி இசை வேறு.

சூப்பர் ஸ்டார் என்ற இமேஜிற்காக எடுக்கப்படும்  திரைப்படங்கள்
ரஜனிகாந்த் என்ற இயல்பான நடிகனை விழுங்கி விட்டது.

2 comments:

  1. இமேஜிற்க்காக எடுக்கப் படும் பில்ட் அப் படங்கள் போரடிக்கவே செய்கின்றன !

    ReplyDelete
  2. You are true..I also remember the acting of Rajini in Mullum Malarum Movie..The superstar image changed his route..Thanks!
    revmuthal.com

    ReplyDelete