Friday, December 6, 2013

உச்ச நீதிமன்றமுமா இப்படி? உங்களைச் சேர்ந்தவரென்றால் இப்படியா?



முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார் தொடர்பாக உச்ச நீதி மன்றம் எடுத்துள்ள முடிவு ஏமாற்றமளிக்கிறது. வருத்தமளிக்கிறது.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அவர் மீதான புகார் உண்மைத் தன்மையுடையது என்றும் அவரது நடவடிக்கை ஆட்சேபகரமானது என்றும் அறிக்கை அளித்துள்ளது. அதன் மீது எவ்வித நடவடிக்கையும் உச்ச நீதிமன்றம் எடுக்காது என்று சொல்லியிருப்பது வருத்தமளிக்கிறது.

ஏ.கே.கங்குலி இப்போது ஓய்வு பெற்றதாலும் புகார் கொடுத்த மாணவி உச்ச நீதி மன்றத்தில் இப்போது பணிபுரியாததும் நடவடிக்கை எடுக்கப் படாமல் இருப்பதற்கான காரணமாம். இது மிகவும் மொக்கையாகவும் சொத்தையாகவும் இருக்கிறது.

தபால் கார்டை வைத்துக்கொண்டு, பத்திரிக்கைச் செய்தியை வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிற, அதற்கான அதிகாரமும் வல்லமையும் கொண்ட நீதிமன்றம் தங்களைச் சேர்ந்த ஒருவரை தப்புவிக்க இப்படி செய்வது நீதியும் இல்லை, நியாயமும் இல்லை.

தங்களின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையை நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருந்தால் நீதிமன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்பட்டிருக்கும். மாறாக எந்த நடவடிக்கையும் கிடையாது என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம். நீதிபதிகளைத் தவிர.

மீண்டும் மீண்டும் இது நிரூபிக்கப்படுவது இந்தியாவின் துரதிர்ஷ்டம்.

2 comments:

  1. தற்போது வருகின்ற சில தீர்ப்புகளை பார்க்கும்போது (உதாரணம் ஆண் பெண் திருமணமே செய்யாமல் சேர்ந்து வாழலாம் ) நீதி தவறான திசை வழியில் செல்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. சாமான்யனின் ஒரே நம்பிக்கை நீதிமன்றமே! அதுவே கேள்விக்குறியதாக மாறும்போது மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது.

    ReplyDelete
  2. இந்தியாவில் உள்ள சில துரதிர்ஷ்டமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete