Wednesday, December 18, 2013

சல்மான் குர்ஷித்தின் நம்பவே முடியாத வீரமும் இந்திய கௌரவமும்



அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கைது செய்யப் பட்ட விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காண்பிக்கும் வீரமும் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளும் மிகவும் பாராட்டத் தக்கது.

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோரை எல்லாம் ஆடைகளைக் களைந்து சோதனை செய்து அவமானப் படுத்திய போதெல்லாம் வராத வீரம் இப்போதாவது வந்ததே என்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா அளிக்க மறுக்கும் சலுகைகளை அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு நாமும் அளிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக கிடையாது. இந்தியாவின் கௌரவத்தை நிலைநாட்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் எடுத்துள்ள நடவடிக்கைகள் சரி.

பூசணிக்காய் போவது தெரியாது, கடுகை களவாண்டால் மட்டும் கண்டு பிடித்து விடுவார்கள் என்ற அளவில் அல்லவா மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது?

இந்தியப் பொருளாதாரத்தையும் நிதித்துறையையும் முற்றிலுமாக தங்கள் நாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விட வேண்டும் என்ற கட்டளைகளுக்கு அடி பணியும் போது மத்திய அரசின் வீரம் எங்கே போனது?

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையே தாங்கள் சொல்லும்படியே இருக்க வேண்டும் என்ற அமெரிக்க ஆணைகளை அப்படியே அமலாக்குகின்ற போது மட்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வீரம் காணாமல் போய் விடுமா?

இந்திய கடற்கரைக்குள் வந்து இந்திய மீனவர்களை இலங்கை கப்பற்படை கைது செய்து கொண்டு படகுகளையும் வலைகளையும் நாசம் செய்து பிடித்து வைத்த மீன்களையும் கைப்பற்றிப் போகிற போது மட்டும் இந்திய அரசு கோழை போல நாடகம் போடுமா?

எது எப்படியோ இப்போது நல்லது நடந்துள்ளது. இது தொடர்ந்து நீடிக்கட்டும்.

கேரள மீனவர்கள் கொல்லப்பட்டபோது முதலில் வெகுண்டெழுந்து பிறகு அவர்கள் இத்தாலியர்கள் என்று தெரிந்ததும் பம்மி பல்டியடித்தது போல பின் வாங்காமல் இருந்தால் சரி.


3 comments:

  1. தேர்தல் நெருங்கி கொண்டுள்ளது ! கூட்டணிகள் உருவாகி கொண்டுள்ளன . இப்ப கூட நல்லவன் வேஷம் போடாவிட்டால் மக்கள் கழுவி கழுவி ஊத்துவாங்களே ! அந்த பயம் தான் இதற்கு காரணம் !இப்ப கூட வீரமாய் இருப்பது போல் காட்டாவிட்டால் பிறகு எப்போதும் அந்த வாய்ப்பே கிடைக்காமல் போகலாம் அல்லவா !

    ReplyDelete
  2. பம்முர நாய் குலைக்குது.....
    ஒண்ணுமே புரியல உலகத்தில...
    என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...!

    ReplyDelete
  3. அமெரிக்கா என்றால் ஆணையிட்டு யாரையும் என்னவும் செய்ய முடியும் என்பதிற்கெதிரக இந்தியாவில் நல்லதே நடந்துள்ளது.
    ஏழைகளை காப்பாற்ற வந்த ஏழை பங்காளன் அமெரிக்கா என்ற குரல்களும் சில ஒலிக்க தொடங்கிவிட்டன :)

    ReplyDelete