Monday, December 16, 2013

நடப்பது இல்லையில்லை நடக்காமல் இருப்பது நல்லதற்கே



http://rajyasabha.nic.in/rsnew/picture_gallery/image/p_5.jpg

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிய இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. டிசம்பர் ஐந்து தொடங்கிய கூட்டத் தொடரில் இது வரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இனியும் நாட்டு மக்களுக்கு நல்லதாக எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.

ஆனால் சிவகங்கைச் சீமான் கையில் ஒரு வெடி குண்டு உள்ளது. இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 என்ற பெயரில் இந்திய மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவாகிற சேமிப்புக்களை பன்னாட்டு மூலதனம் கொத்திக் கொண்டு போக ரத்தினக் கம்பளம் விரிக்கிற மசோதா இது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள எல்.ஐ.சி யின் வளர்ச்சியை பாதிக்கும் உள்நோக்கம் கொண்ட மசோதா இது.

எது எப்படி போனாலும் இந்த மசோதாவை மட்டும் எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்று அவர் துடிக்கிறார். பாஜக தலைவர்களை சென்று சந்திக்கிறார். இந்த தொடரை நழுவ விட்டால் காலி என்று ரிசர்வ் வங்கி கவர்னர் வேறு அறிக்கை விடுகிறார். பன்னாட்டு முதலாளிகளின் முதலைக் கண்ணீர் படலம் வேறு.

நாடாளுமன்றம் கடந்த நாட்களில் எப்படி முடங்கிப் போனதோ அது போல இனி வரும் நாட்களிலும் அப்படியே முடங்கிப் போகட்டும். அதுதான் நாட்டிற்கும் நல்லது. மக்களுக்கும்  நல்லது.

4 comments:

  1. படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்பது நமது அமரகவியின் வாக்கு.

    ReplyDelete
  2. படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்பது நமது அமரகவியின் வாக்கு.

    ReplyDelete
  3. சிதம்பரம் நாட்டை விற்று விடுவார் போல..
    revmuthal.com

    ReplyDelete
  4. ப.சி.க்கு அந்நிய பசி அதிகமாக பிடித்து ஆட்டுகிறது தோழரே ! வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி என்றாகிவிட்ட பிறகு காங்கிரசுக்கு டெபாசிட் ஆவது கிடைக்குமா ? சர்வ நிச்சயமாக கிடையாது !

    ReplyDelete