Thursday, December 5, 2013

மன்னிப்பு கேட்க வேண்டியது ஜெயலலிதா அல்ல, கருணாநிதி



சங்கராச்சாரியார்கள் விடுதலையாகி விட்ட மிதப்பில் அவர்களை கைது செய்த தவறுக்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சர்வதேச அரசியல் தரகர் மற்றும் கோமாளி சுப்ரமணியசாமி கூறியிருக்கிறார்.

ஜெயேந்திர சரஸ்வதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பிரச்சினை இருந்த காரணத்தால்தான் இந்த கைது நடந்தது என்ற கருத்து பலருக்கும் உள்ளது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் சங்கரராமன் கொலையானதும் அதற்கு இந்த மகா மனிதர்களைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மைதானே.

இதுவே கருணாநிதிக்கும் ஜெயேந்திர சரஸ்வதிக்கும் இடையில் பிரச்சினை இருந்தாலும் கூட, கொலை வழக்கில் இன்னும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் கூட கருணாநிதி சங்கராச்சாரியார்களை கைது செய்திருக்க மாட்டார் என்பதும் உண்மைதானே.

கின்னஸ் பல்டி காரணமாக இவர்கள் விடுதலையாகி விட்டதால் கைது செய்ததற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கு போல, தினகரன் அலுவலக ஊழியர்கள் எரிப்பு வழக்கு போல இந்த வழக்கையும் நீர்த்துப் போக வைத்த கருணாநிதிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சங்கராச்சாரியார்களிடம் அல்ல.

மக்களிடம், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம்.


2 comments:

  1. வணக்கம்
    சரியாக சொன்னிர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நம் கண் முன்னே குற்றங்களை இழைத்துவிட்டு அரசியல்வாதிகள், மதவாதிகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் சட்டத்தை வளைத்து தப்பித்துவிடுவதைக் கண்டும் மவுனமாய் இருக்கும் நாம் தான் நம் தேசத்தை அபாயகரமானதாய் மாற்றிக் கொண்டிருக்கின்றோமே என நம் வருங்கால சந்ததிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.. :)

    --- விவரணம். ---

    ReplyDelete