Tuesday, December 17, 2013

கங்குலி கம்பி எண்ணுவதுதான் நீதி

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி தன்னிடம் 
எவ்வாறு தவறாக நடந்து கொண்டார் என்று அந்தப் பெண்
அளித்த பிரமாண வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில்தான் கங்குலி நடந்து கொண்ட முறை
வரவேற்கத்தக்கது அல்ல, ஆட்சேபகரமானது என்று உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் குழுவும் அறிக்கை அளித்தது. ஆனால் நடவடிக்கை
எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொன்னது.

முன்னாள் பஞ்சாப் டி.ஜி.பி  கே.பி.எஸ். கில்லிற்கு ஐந்து மாத
சிறைத்தண்டனை வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். அது
குறைக்கப்பட்டது என்பது வேறு விஷயம்.

கங்குலி செய்தது என்பது கே.பி.எஸ்.கில் செய்ததை விட இன்னும்
மோசமான விஷயம். பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்
தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரையறுத்த அடிப்படையில்
கங்குலி செய்ததற்கு கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

அதுதான் நீதி.
 

5 comments:

  1. கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஒரு பெண் ஒரு வாக்குமூலம் கொடுத்தால் அதை ஒட்டி எப்படி தீர்ப்பு கொடுக்க முடியும்?

    அப்ப கோர்ட் எல்லாம் எதற்கு?

    ReplyDelete
  3. நீதி தேவதையின் தராசு தட்டு ஒருபுறமாய் சாயலாமா ? சாமான்யனின் ஒரே நம்பிக்கையையும் தகர்க்கும் செயல் அல்லவா இது ? நீதிபதிகளுக்கு என்று தனி நீதி உள்ளதா ? அல்லது அவர்கள் வானத்திலிருந்து வந்தவர்களா ?அவர்களும் மனித இனம்தானே ?படித்த மேதைகள் இதற்கு பதில் சொல்லட்டும் !

    ReplyDelete
  4. ALL ARE EQUAL BEFORE LAW!

    ReplyDelete
  5. அவரின் வாக்குமுலம் சிறந்த கதையாகத்தான் தெரிகிறது நம்பமுடியவில்லை . அவர் சம்பவம் நடந்த மறுநாளே புகார் தெரிவித்து இருந்தால் நம்ப வாய்ப்பு உள்ளது . நீதிபதியின் தீர்ப்பால் பாதிப்படைந்தவர்களின் குள்ளநரி தந்திரமாக் கூட இருக்கலாம் . எதற்கும் உண்மை வெளிக்கொண்டுவர . சுதந்திரமான விசாரணை தேவை

    ReplyDelete