Thursday, December 26, 2013

இசைப் பிரியா பற்றி கலைஞர் பேசலாமா?



தேவயானிக்காக துடிப்பவர்கள் இசைப்பிரியாவிற்காக துடித்தார்களா என்று கலைஞர் கேட்டுள்ளதை படித்தீர்களா என்று ஒரு தோழர் பின்னூட்டம் ஒன்றில்  கேட்டிருக்கிறார்.

உண்மையில் நான் படிக்கவில்லை. கலைஞர் அப்படியெல்லாம் ஒப்பிட்டு கேட்கக் கூடியவர்தான்.

ஆனால் என் நினைவிற்கு வேறு விஷயம் வந்தது.

சேனல் 4 தொலைக்காட்சி இலங்கை ராணுவத்தின் அராஜகங்களை அம்பலப்படுத்தி முதன் முதலில் காணொளி காட்சிகளை வெளியிட்ட போது இவையெல்லாம் உண்மையானதுதானா? நம்பகத்தன்மை உடையதா? இது எப்போது எடுக்கப்பட்டது? என்றெல்லாம் பல கேள்விகளை ஒரு வழக்கறிஞர் போல அப்போது கேட்டார்.

காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்ததால் அந்த காணொளிக் காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி கேட்டு திசை திருப்பிய புத்திசாலி கலைஞருக்கு கூட்டணி முறிந்து போனதால் இசைப் பிரியா மீது இப்போது அனுதாபம் வந்து விட்டது.

அதனால் அவர் மீது மக்களுக்கு அனுதாபம் வந்து விடப் போவதில்லை.

2 comments:

  1. நீஙக சொன்ன மாதிரி அவர் ஒரு கில்லாடி தான் :)

    ReplyDelete
  2. கூட்டணியில் இருந்த போது மகள் மீது பிரியம் ! அது முறிந்தவுடன் மக்கள் மீது பிரியம் ! அதுவும் உலகில் வேறு எவரும் செய்யாத சாதனை ஒன்றை அவர் செய்துள்ளாரே ! அதுதான் இலங்கை தமிழர்களுக்காக காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் இருந்த உண்ணாவிரதம் ! எவருமே முறியடிக்க முடியாத சாதனை அல்லவா அது ? அவர் இசைப் பிரியாவை பற்றி கவலைப்படுவதில் தவறில்லையே ?

    ReplyDelete