Monday, December 2, 2013

நீயா நானாவில் கோபி சொல்லாமல் விட்ட கருத்து



வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நேற்றைய விஜய் டி.வி நீயா நானா தான். பழைய பாடலா, புதிய பாடலா என்ற விவாதத்தில் விவாதத்தை விட பழைய பாடல்களின் ஆக்கிரமிப்புதான் இனிமையாக, ரசிக்கும்படி அமைந்திருந்தது. பழைய பாடல்களை பாடிய ஒவ்வொருவரும் அதன் அர்த்தத்தையும் உணர்வையும் மனதில் உள்வாங்கிக் கொண்டு பாடியது மிகவும் அற்புதமாக இருந்தது. டி.எம்.எஸ், சீர்காழி, திருச்சி லோகநாதன் ஆகிய  மறைந்த பாடகர்கள் ஒவ்வொருவருமே உயிர் பெற்று அரங்கில் அமர்ந்து பாடியதாகவே நான் உணர்ந்தேன். இசைக்கருவிகள் இல்லாததால் இன்னும் வலிமையாக பாடல்கள் ஒலித்தது போலவே எனக்கு தோன்றியது.

புதிய பாடல்களை விரும்புபவர்களும் பழைய பாடல்களை பாடியது சுவாரசியமாகவே இருந்தது. நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல அழகன் என்பேன் பாடலையும் இலந்த பழம் பாடலையும் இரண்டு பெண்கள் நன்றாகவே பாடினார்கள்.

பழைய பாடல்கள் ஜீவனோடு இருப்பதற்கு அவை அந்த கால சமூகத்தையும் பிரச்சினைகளையும் பாடியதுதான் என்றும் இந்த கால பாடல்கள் அப்படி எதையும் பிரதிபலிக்கவில்லை என்பதையும் கோபி சரியாகவே சொன்னார். இயக்குனர் வசந்தும் அதை ஏற்றுக் கொண்டார்.

இன்னும் கொஞ்ச நேரம் நீடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றிய அந்த நிகழ்ச்சியை முடித்து வைத்த விதம்தான் சரியில்லை என்று தோன்றியது.

பழைய பாடல்களின் மதிப்பை இன்றைய தலைமுறை உணராதது போல புதிய பாடல்களை நீங்களும் மதிப்பதில்லை என்று கோபி பெரியவர்களைப் பார்த்து குறை சொன்னார். பெரும்பாலான புதிய பாடல்கள் மதிக்கும்படி இல்லை என்பதையும் அவர் சேர்த்து சொல்லி இருந்தால் சரியாக இருக்கும்.

என் கவனத்தில் பட்ட இரண்டு அம்சங்கள்.

பழைய பாடல்கள் அணியில் ஏன் ஒரு பெண் கூட இல்லை?

பழைய பாடல்களை பாட வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலைக்கு கறுப்புச் சாயம் அடித்து தங்களை இளைஞர்களாக காண்பிக்கவே முயற்சி செய்தார்கள்.

3 comments:

  1. தலை சாயம் வரை கவனிச்சிருக்கீங்களா!?

    ReplyDelete
  2. பழைய பாட்டுரசிகர்கள் தேங்கி போய் விட்டார்கள் என்று கோபி அபத்தமாக பேசிவிட்டார்.இதே மனிதர்கள் தான் இலக்கியத்தில் தி.ஜாவையும் ஜெயகாந்தனையும் விழுந்து விழுந்து படித்தவர்கள் இன்று எஸ்.ராவையும் ஜெயமோகனையும் இரா.முருகனையும் ரசிக்கிறார்கள்.இன்றைய சினிமா பாடலை கேட்டால்"உன்னுடைய வசந்தத்தில் ஒன்றுமில்லை ரசிப்பதற்கு "என்ற பழைய பாட்டு தான்நினைவிற்கு வருகிறது. Y

    ReplyDelete
  3. \\பழைய பாடல்களின் மதிப்பை இன்றைய தலைமுறை உணராதது போல புதிய பாடல்களை நீங்களும் மதிப்பதில்லை என்று கோபி பெரியவர்களைப் பார்த்து குறை சொன்னார். \\கோபி பொத்தாம் பொதுவாகவே நீயும் யோக்கியன் இல்லை அவனும் யோக்கியன் இல்லை என்ற விதத்தில் தான் சொல்லி நிகழ்சியை முடிப்பார்.......... இதைப் பார்க்கவில்லை, இணையத்தின் மூலம் நிகழ்சியை பார்க்க இருக்கிறேன், பதிவுக்கு நன்றி.

    ReplyDelete