Thursday, December 15, 2011

நெகிழ்ச்சியூட்டிய ஒரு மரணம்.





ஒரு தோழரின் தாத்தா  இறந்து விட்டார். தொன்னுற்றி எட்டு வயதைக் கடந்தவர்.  இந்த வயதில் மரணம் என்பதில் அதிசயமில்லை. இத்தனை நாள் இருந்ததுதான் அதிசயம். விஷயம்   அதுவல்ல.

இன்று காலை அஞ்சலி  செலுத்த சென்ற போது தெரிந்த தகவல்தான் அதிசயிக்க வைத்தது.

அவரது கண்கள் தானம் செய்யப்பட்டிருந்தன. அவரது விருப்பத்தை  அவரது குடும்பத்தினர் நிறைவேற்றியிருந்தனர். தொன்னுற்றி எட்டு வயதில் தானம் செய்யக் கூடிய விதத்தில் அவரது கண்கள் முழுமையான ஆரோக்கியமாக இருந்தது என்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான்.

வாழ்வை விட  மரணம் அர்த்தபூர்வமாய் மாறிய நெகிழ்ச்சியான நிகழ்வு இது!

1 comment:

  1. நல்ல விஷயம். விருது நகர் அருகே ஓர் ஊரில் இறக்கும் அனைவர் கண்களும் தானமாக தரப்படுகிறது. இதை பல ஆண்டுகளாக தொடர்கின்றனர். எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு குடும்பம் அந்த ஊரை சேர்ந்தது. துக்கத்துக்கு அங்கு செல்லும் போதெல்லாம் இதை சொல்லியுள்ளனர்.

    ReplyDelete