Saturday, December 3, 2011

உலக வங்கி ஓய்வூதியர் மன்மோகனை யார் நம்ப வேண்டுமாம்?



சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற்றால் நம்பிக்கையை  இழந்து விடுவோம் என்று சொல்கின்றார் மன்மோகன்சிங். யாருடைய நம்பிக்கையை அவர் இழந்து விடுவாராம்? பன்னாட்டு முதலாளிகள், பணக்கார நாடுகள், வால்மார்ட் போன்ற பகாசுரக் கம்பெனிகள் ஆகியோருடைய நம்பிக்கை மட்டுமே இந்த உலக வங்கி ஓய்வூதியருக்கு முக்கியமாய் தோன்றுகின்றது.


அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கிற்கு இந்திய வணிகர்களும் விவசாயிகளும் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? இந்திய மக்கள் அவர் மீதும் அவரது அரசாட்சி மீதும் எப்போதோ நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இது பற்றி அவருக்கு கவலையில்லை. பன்னாட்டு முதலாளிகள் நம்பிக்கை இழக்கக் கூடாது. அவ்வளவுதான். இப்படி ஒரு பிரதமரைப் பெற இந்திய மக்கள் என்ன தவம் செய்தனரோ?

No comments:

Post a Comment