மம்தாவின் பரிசு - சாராய சாவுகள்
முப்பத்தி நான்கு வருட இடது முன்னணி ஆட்சியை
தோற்கடித்த மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அரசு
அளிக்கும் தொடர் பரிசுகள் - மரணம்தாம்.
முதலில் குழந்தைகள் மடிந்தார்கள்.
பின்பு இந்த ஆட்சி வர அடிப்படைக் காரணமாக
இருந்த மாவோயிஸ்டுகளின் தலைவர்
கிஷன்ஜியைக் கொன்று தனது நன்றியை
காணிக்கையாக்கினார் மம்தா,
பின்பு மருத்துவமனை தீ விபத்தில்
நோயாளிகள் மரணம்.
இப்போது கள்ளச்சாராய சாவுகள்.
முந்தைய மருத்துவமனை சம்பவங்கள்
எதிர்பாராத நிகழ்வுகளாக இருந்திருக்கலாம்.
ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தா
ஆட்சி வந்த பிறகு திரினாமுல் கட்சியினரின்
முக்கிய தொழிலாக கள்ளச்சாராயம்
மாறிப்போனது.
அதற்கு விலையாக இதோ கிட்டத்தட்ட
இருநூறு பேர் இறந்து போய்விட்டனர்.
வேறு கட்சி ஆட்சியாக வரிந்து கட்டி
எழுதும் ஊடகங்கள் அவர்களின்
தேவதையாக உள்ளதால் மம்தாதீதி
பற்றி மவுனமாக உள்ளனர்.
ஆனால் வங்க மக்கள் அவரை
மரண தேவதையாக பார்க்கத்
தொடங்கி விட்டனர்.
No comments:
Post a Comment