புதிய அணை கட்டினால் நிலநடுக்கம் வராதா? கேரள அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி! தேனி, டிச. 11 -
முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டினால் நிலநடுக்கம் வந்து உடைத்துவிடாதா என கேரள அரசுக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
யும், தமி ழக-கேரள எல்லையில் பதற் றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் விவசாயத் தொழி லாளர் சங்கமும் இணைந்து நடத்திய மாபெரும் உண் ணாவிரதப்போராட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.
சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற இப்போராட்டத் திற்கு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ, விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ ஆகியோர் தலை மை வகித்தனர்.
போராட்டத்திற்கு தலை மை வகித்து கே.பாலகிருஷ் ணன் பேசியதாவது:-
கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் சிறப்புக்கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றியுள் ளது. வரலாற்றை மறந்து விட்டு, வாதங்களை எழுப்பு வது கேரள, தமிழக நலன் களுக்கு உகந்ததல்ல. 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக் கால தீர்ப்பு வழங்கியபடி, 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற உத்தரவை மதிக்காமல் சிறப்பு சட்டத் தை நிறைவேற்றினார் காங் கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி. அதனைத் தொடர்ந்து தமிழக, கேரள முதலமைச்சர்கள், பாசனத் துறை அமைச் சர்கள், அரசு அதிகாரிகள் என 15 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித உடன்பாடும் ஏற் படவில்லை.
இந்நிலையில் கேரள அரசு புதிய தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக மக்க ளை வேதனையில் ஆழ்த்தி யுள்ளது. அதோடு நீதிமன் றத்திற்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கேரள அரசு சொல் லியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, 15 முறை நடந்த பேச்சுவார்த்தை பய னளிக்காத நிலையில் கேர ளமே உச்சநீதிமன்ற தீர்ப் பை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி, நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் தலைமை யிலான ஐவர் குழு அமைக் கப்பட்டு பிப்ரவரி மாதம் அறிக்கையை தாக்கல் செய் கிற வேளையில் கேரளம் நிறைவேற்றியுள்ள தீர்மா னத்தை தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் ஏற்றுக்கொள் ளாது.
மத்திய அரசு கூட்டி யுள்ள கூட்டத்தில் இருமா நில ஒற்றுமை, பதற்றத்தை தணித்து, சுமூக நிலையை உருவாக்குவது, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது சம் பந்தமாக மட்டுமே பேச்சு வார்த்தையில் இடம் பெற வேண்டும். இதில் தமிழக அரசு கலந்து கொண்டு தமி ழகத்தின் நிலையை எடுத் துச் சொல்ல வேண்டும். புதிய அணை கட்டுவது, நீர் மட்டத்தை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெறக்கூடாது.
தமிழகத்தில் கேரள மக் களை தாக்குவது, கேரளத் தில் தமிழக மக்களை தாக் குவது போன்ற சம்பவங்கள் கவலையளிக்கத்தக்கதாகும். அந்தந்த மாநிலங்களில் சட்ட-ஒழுங்கை காப்பாற் றுவது மாநில அரசுகளின் கடமையாகும். காவல்துறை யினர் கலவரக்காரர்களை அடக்கி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக முதல்வர் முல் லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து, சட்ட சபை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள் ளார். இதனை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வர வேற்கிறது.
தமிழக விவசாயிகளின் பாசன உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது தேனி உண்ணாவிரதத்தில் பெ.சண்முகம் பேச்சு | |||
தேனி, டிச.11- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தேனியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து, பெ.சண்முகம் பேசியதாவது : முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்திலும் கேரளத்தி லும் இனவெறியை கிளப்பி, மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் ஆளும் காங்கிரஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பை முடமாக்கியதன் விளைவாக, விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின் றன. கேரளத்தில் முல்லை பெரியாறு அணையில் 120 அடி தண்ணீர் தான் தேக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள் ளது. 120 அடி தேக்கினால், தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்கிற நோக்கமே கேரள அர சின் தீர்மானம் என தெரிகிறது. தமிழக அரசு முல்லை பெரியாறு அணை பிரச்ச்னையில் நியாயமாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டு வரு கிறது. நாளிதழ்களில் தமிழக முதல்வர் முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக தெளிவான விளக்கத்தை தெரிவித்திருக் கிறார். பொறியியல் வல்லுநர்கள் அணை வலுவாக உள்ளது, 142 அடி தேக்கலாம் என தெரிவித்த பிறகும், கேரள அரசு நியாயத்தை உணர்ந்து நடந்து கொள் ளாமல் பிடிவாதமாக இருக்கிறது. தமிழகத் தின் பாசன உரிமையை எந்த காரணத் தைக் கொண்டும் விவசாயிகள் சங்கம் விட்டுக்கொடுக்காது. இந்த அணை தொடர்பான வழக் கிற்கு எந்த பாதகமும் ஏற்படாமல், இரு மாநிலங்களின் மக்களும் அமைதியாக வாழ, ஒரு சுமூக தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு வருகிற 16ம் தேதி கூட்டியுள்ள பேச்சுவார்த்தையில், தமிழகத்தின் சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென தமிழக அரசை விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பெ.சண்முகம் பேசினார். இரா.அண்ணாத்துரை எம்எல்ஏ போராட்டத்தை வாழ்த்தி இரா.அண் ணாதுரை எம்எல்ஏ பேசியதாவது : முல்லை பெரியாறு அணை பலவீன மாக உள்ளது என கேரளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் பேசி பதற்றத்தை ஏற்படுத்தி வரு கின்றன. 1980 முதல் 1994ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு ஏராளமான நிதியை செலவழித்து அணைக்கு வலு சேர்த்துள்ளது. 2006ம் ஆண்டு 142 அடி தேக்கலாம் என உச்சநீதிமன்றம் இடைக் காலத் தீர்ப்பு வழங்கியதை காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்ளாமல், புதிய சட்டத்தை இயற்றி நிலைமையை சிக்கலாக்கியது. தற்போது பதற்றமான சூழ்நிலையில் காங் கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பும், பாஜகவும் அணையை இடிக்கப்போவ தாக சொல்லி ஆயுதங்களை தூக்கிச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து கேரளத்தில் தமிழ் மக்களை தாக்குவதும், தமிழகத்தில், கேரள மக்களை தாக்குவது மான சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறைச்சம்பவங்களால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடாது. எனவே, அணையை பாதுகாக்க, மத்திய தொழில் பாதுகாப்புப்படையை மத்திய அரசு அனுப்பி நடவடிக்கை எடுக்கவேண்டும். இரு மாநில முத லமைச்சர்களை அழைத்து இந்த பகுதி களில் சுமூகநிலை ஏற்பட உதவ வேண் டும். இரு மாநில அரசு அதிகாரிகள் மட் டத்திலான பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும். இவ்வாறு இரா.அண்ணாத்துரை பேசினார். | |||
|
சரியான கேள்விகள் தான், ஆனால் இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வாய் திறக்கவில்லையே... எது எதற்கோ குரல் கொடுப்பவர்கள், இதற்கு ஏன் அமைதி காக்க வேண்டும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தொண்டர்கள் கவனிக்க வேண்டும்... அரசு ஊழியர்களை ஒரே கை எழுத்தில் வீட்டுக்கு அனுப்பிய பொழுது இனி எப்பொழுதும் இந்த அம்மையாருடன் கூட்டணி இல்லை என்று முழங்கி விட்டு, ஒரு சில தொகுதிகளுக்காக போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்ததும்... உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் சேலம் ஜனநாயக வாலிபர்கள் சங்கத்தின் தோழர்கள் மண்டை உடைந்து கதறிய பொழுது வாய் மூடி போயஸ் கார்டன் வாசலில் மண்டி இட்டு கிடந்ததும் நீங்கள் மறந்திருக்கலாம்? நான் மறக்க முடியாது.. மன்னிக்கவும் முடியாது
ReplyDeleteதோழர் சூர்யா, உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் எல்லோருமே மார்க்சிஸ்ட் கட்சித் த்லைவர்கள்தான். சட்டமன்ற உறுப்பினர்களாக, மாநில செயற்குழு உறுப்பினர்களாக உள்ள தலைவர்கள்தானே!
ReplyDeleteசேலம் பிரச்சினைக்காக சட்டமன்றத்திலும் தமிழக வீதிகளிலும் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்
ReplyDelete