Tuesday, December 6, 2011

நிறுத்தம்தான், பிரச்சினை இன்னமும் முடியவில்லை.




சில்லறை வர்த்தகத்தில்  அந்நிய நேரடி முதலீட்டை  அனுமதிப்பது
என்ற பிரச்சினை  முடிவிற்கு  வந்து விட்டதாகவே  தற்போது 
பல ஊடகங்கள்  சொல்கின்றன.


அது உண்மையா ? 


மத்திய அரசு சொல்லும் வார்த்தைகளை கவனமாக கேட்டால் 
அப்படி  இல்லை  என்பது  தெரியும்.


அமைச்சரவை  முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த
கருத்தின்  அடிப்படையில்  முடிவு  எடுக்கப்படும்  என்றுதான் 
அரசு  சொல்கின்றது. ஆகவே  அரசு முடிவை கைவிடவில்லை.
பிறகு  மீண்டும் எந்த நேரம் வேண்டுமானாலும்  இதே முடிவை
அமுலாக்க முயலும். 


பின் ஏன்  இப்போது நிறுத்தி வைக்கிறார்கள்? 


நாடாளுமன்றம் நடக்கவில்லை. அங்கே  அரசுக்கு சில
அடிமை வேலைகள்  உள்ளது. பென்ஷன் ஒழுங்காற்று 
ஆணைய   மசோதாவை  அமுலாக்கி  இந்திய  மக்களின் 
தொழிலாளிகளின் சேமிப்பை, கோடிக்கணக்கான ரூபாய்களை
பன்னாட்டு மூலதனத்திடம்   ஒப்படைக்க துடிக்கிறது. 


இது போல  ஏராளமான மக்கள் விரோத மசோதாக்கள்
உள்ளது. அவற்றை  நிறைவேற்ற  சில்லறை வணிகத்திற்கு
கொஞ்சம்  விடுமுறை  கொடுத்துள்ளது. அவ்வளவுதான். 


ஆகவே பிரச்சினை முடியவில்லை. இன்னும் வீரியத்தோடு
நாடாளுமன்றம்  இல்லாத போது தாக்குதல் இன்னும் 
தீவிரமாக  வரும். 


சுணக்கம் தேவையில்லை. சோர்வு தேவையில்லை. 
அரசின் சதிகளை முறியடிக்க விழிப்போடு  இருப்போம்.
     

1 comment:

  1. //பென்ஷன் ஒழுங்காற்று ஆணைய மசோதாவை அமுலாக்கி இந்திய மக்களின் தொழிலாளிகளின் சேமிப்பை, கோடிக்கணக்கான ரூபாய்களை
    பன்னாட்டு மூலதனத்திடம் ஒப்படைக்க துடிக்கிறது.

    அருமை. ஆனால் மக்களிடம் துளி கூட விழிப்புணர்வு இல்லை.

    ReplyDelete