Thursday, December 8, 2011

பாதுகாப்பான அணையை பார்த்து வந்தேன்!




இல்லை. இது முல்லைப் பெரியார் அணை பற்றிய பதிவு
இல்லை. நேற்று  நான் எழுதிய பதிவிற்கு எதிர்பார்த்தது
போலவே  கடுமையான கண்டனங்கள். தனியாக ஒரு
பதிவு போட வேண்டிய அளவிற்கு. நாளை மீண்டும் 
அது பற்றி. 


இப்போது  நேற்று  நான் போய் வந்த கல்லணை பற்றி.


பள்ளி நாட்களிலிருந்தே  என்னை வசீகரித்து வந்தது
கல்லணை. நான்  பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த
திருக்காட்டுப்பள்ளி க்கு பதினைந்து கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள கல்லணை  முன்பு போல 
இப்போது  இல்லை என்பது வருத்தமான ஒன்று. 


காவிரியில் இப்போது தண்ணீர்  இருந்தாலும் அங்கிருந்து
கொள்ளிடத்திற்கோ  , கல்லனைக் கால்வாயிலோ, 
அல்லது  காவிரியிலோ  அதிகமான அளவில் திறந்து
விடப்படவில்லை. நதிக்கரைகள் மட்டுமல்ல, 
நதிக்குள்ளேயே  புற்கள் மண்டிக்கிடக்கிறது. 


மறு புறத்தில் ஜேசிபி  கொண்டு மணல் தாராளமாக
லாரிகளில் சென்று கொண்டே  இருக்கிறது. 


கல்லணைக்கு, கொள்ளிடத்திற்கு  அருகில் இரு 
அறிவிப்புப் பலகைகள். 


1961  ல்  காவிரி உடைப்பு ஏற்பட்ட இடம் என்று 
ஒரு பலகை. 


1961 ல் கொள்ளிடத்தில் உடைப்பு ஏற்பட்ட இடம் 
என்று  ஒரு பலகை. 


இப்போது  உள்ள நிலையைப் பார்த்தால் புற்கள்
மண்டியிருக்கும் காவிரியில்  எதிர்காலத்தில் 
உடைப்புக்கு வழியில்லாமல்  கல்லணை 
பாதுகாப்பாகவே  உள்ளது போலவே 
தோன்றுகின்றது. 


இதோ  படங்கள் கீழே.















 
   

2 comments:

  1. உங்களுடைய முந்தைய பதிவைப் படித்தேன் - அதன் பாதிப்பில் ஒரு பதிவு எழுதினேன்.
    உங்களுடைய கேள்வியின் ஆதங்கம் சரிதான்... ஆனால் சில அரசியல் விளையாட்டுக்களில் உள்ள பின்புலம்தான் நம்மை வெறுக்கடிக்கிறது.
    கல்லணை - மிகப் பழைய அணை - அதனால் அது பாதுகாப்பானது என்கிறீர்களா இல்லையா - இந்தப் பதிவைப் படித்தவுடன் அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சிக்கலாக இருக்கிறது. விளக்கினால் நன்றாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  2. கல்லனைக்கு பகலில் சென்றதில்லை, அந்த குறையை தீர்த்து விட்டீர்கள்

    ReplyDelete