Saturday, December 3, 2011

பா.ஜ.க வின் பதில் என்ன?



நாங்களாவது பரவாயில்லை. சில்லறை வர்த்தகத்தில்  51 %  அன்னிய முதலீட்டைத்தான் அனுமதிக்க விரும்புகின்றோம். ஆனால் பாரதீய ஜனதாவோ தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இதே துறையில் 100 % அன்னிய முதலீட்டை அனுமதிக்க தயாராக இருந்தது. ஆனால் இப்போது 50 % மே கூடாது  என நாடகம் ஆடுகின்றது என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


இதற்கு பா.ஜ.க வின் பதில் என்ன?


புதிய பொருளாதாரக் கொள்கையை அமுலாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதுதான் உண்மை. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு என்றே முன்னாள் பத்திரிக்கையாளர் அருண் ஷோரி தலைமையில் ஒரு அமைச்சகமே வைத்திருந்த கட்சி பா.ஜ.க. தொலைதொடர்புத் துறையை திறந்து விட்டது, காப்பீட்டுத்துறையில் தனியாரை அனுமதித்தது, பால்கோ போன்ற நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்றது ஆகியவையெல்லாம் பா.ஜ.க வின் திருப்பணிகள்.


பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். உலகமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் பாஜக எந்த சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். ஆனால் பாஜகவோ சில சீர்திருத்தங்களுக்கு மட்டும் கை கோர்க்கும். சிலவற்றை எதிர்க்கும். அவற்றை தனது ஆட்சிக்காலத்தில் தான் மட்டுமே செய்து அதன் மூலம் கிடைக்கிற டீலிங் பயன்களை  தான் மட்டுமே சுருட்டிக் கொள்ள நினைக்கும்.


சில்லறை வர்த்தகத்திலும் இதுதான் உண்மை. இரு கட்சிகளுமே நாற்றமெடுத்த உலகமயச் சேற்றில் ஊறிய ஊழல் மட்டைகள்தான்.

1 comment: