Tuesday, December 27, 2011

பரிகார பூஜையாம்! பாதுகாப்பை கவனியுங்கய்யா. . .





அனேகமாக வேலூர் பதிப்பு நாளிதழ்களில் மட்டும் இந்த செய்தி வெளியாகியிருக்கும். வேலூர் கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கோபுரங்களில் முளைத்துள்ள செடிகளை அகற்றிக் கொண்டிருந்த கோயில் ஊழியர் ஒருவர், அவர் பிடிமானத்திற்கு பிடித்திருந்த சுவர் உடைந்து போக கால் தவறி மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்து போய் விட்டார்.

இந்தக் கோயிலில் மட்டுமல்லாமல் வேறு பல கோயில்களிலும் இது போன்ற விபத்துக்கள் சகஜம் என்றும் இத்தனை நாள் படு காயம், சாதாரண காயம் என்று ஏற்பட்டிருந்த நிலை மாறி இப்போதுதான் உயிர் பலி என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

கடைசியாக போட்டிருந்த செய்திதான் என்னை மிகவும் ஆத்திரம் கொள்ள வைத்தது. கோயிலில் மரணம் ஏற்பட்டதால் உடனடியாக பரிகார பூஜை செய்யப்பட்டு  பக்தர்களுக்கான அர்ச்சனைகள், பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றது.

ஒரு மனித உயிர் பலி போக காரணமாக இருந்த கோயில் நிர்வாகம், இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க என்ன வழி என்று உடனடியாக விவாதித்திருந்தால், கோபுரங்கள் மீது பாதுகாப்பாக ஏற தேவைப்படும் உபகரணங்களை வாங்கியிருந்தால், அல்லது குறைந்தபட்சம் வாங்குவது என்று முடிவெடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு உடனடியாக பரிகார பூஜை நடத்துகின்றார்களாம். இந்த பூஜையினால் போன உயிர் திரும்ப வந்து விடுமா? அல்லது எந்த பாதுகாப்பும் செய்யாவிட்டால் இனிதான் விபத்துக்கள் நடக்காமல் இருந்திடுமா?

என்ன ஒரு மூடத்தனம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

2 comments:

  1. இவர்களுக்கு கொஞ்சமே கூட இரக்கம் இல்லை.

    ReplyDelete
  2. எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த போவதில்லை மக்கள் அருமையான படைப்பு மிக்க நன்றி .

    ReplyDelete