ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் புதிய அமைச்சராகியுள்ளார்
அஜித் சிங்.
வி.பி.சிங் , நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோருடைய
அமைச்சரவையில் மந்திரியாக இருந்த அஜித்சிங்
இப்போது மன்மோகன்சிங் ஆட்சியிலும் மந்திரியாகி
விட்டார்.
பிரதமர் கனவோடு வாழ்க்கை நடத்தி கடைசியில்
மொரார்ஜி தேசாய் ஆட்சியை கவிழ்த்து பிரதமராகி
நாடாளுமன்றத்தையே சந்திக்காமல் இந்திராவால்
கவிழ்க்கப்பட்ட சரண்சிங்கின் மகன் இவர்.
வி.பி.சிங்கோடு இணைந்து ஜனதா தளத்தை
துவக்கி, அதன் தலைவராகி, தந்தையின் கனவான
பிரதமர் கனவை தானும் கண்டு கட்சியை
உடைத்தவர்.
இரண்டு மூன்று எம்.பி பதவிகள் அதுவும்
கூட்டணி இருந்தால்தான் என்ற அளவில்
அரசியல் எல்லை சுருங்கிப் போன
அஜித்சிங் இப்போது பாஜக அணியிலிருந்து
காங்கிரஸ் அணிக்கு தாவி விட்டார்.
அமைச்சர் பதவி கிடைத்து விட்டது.
ஆனாலும் பாவம் - தடுமாறி தள்ளாடும்
விமானப் போக்குவரத்து துறை.
வெளி நாட்டில் படித்த இந்த மேதை
என்ன பாடு படப்போகின்றாரோ?
No comments:
Post a Comment