Sunday, December 4, 2011

இப்போதே இப்படியென்றால் விடுதலைக்கு எப்படி?



கழகக் கண்மணிகள்  வெகு நாட்களுக்குப் பிறகு  உற்சாகமாக 
காணப்பட்ட  நிகழ்வு  கனிமொழிக்கான  வரவேற்பு. குடும்பம்தான்
கழகமாகி விட்டது  என்ற  வேதனையையும் ஒளித்து வைத்துக் 
கொண்டு, தள்ளாத வயதில்  தனது தலைவரே  மகிழ்ச்சியில் 
மூழ்கும்போது  அந்த மகிழ்ச்சியை  தனது  மகிழ்ச்சியாக  ஏற்று 
அவனும்  விமான நிலையத்தை  குலுங்க வைத்தான். 


செய்யுள்களில் வளர்ந்த தமிழ் 
நாடகங்களில் வளர்ந்த தமிழ் 
உரை நடைகளில், கட்டுரைகளில், மேடைப்பேச்சுகளில் 
வளர்ந்த  தமிழ்,
திரைப்படங்களாலும், கவிதைகளாலும் 
வளர்ந்த தமிழ் 


இன்று  எங்கே  உள்ளது  என்றால்
அரசியல் ஃ ப்ளெக்ஸ் பேனர்களில் 
நீக்கமற நிறைந்துள்ளது. 

 
அதன் ஆற்றலை  கனிமொழிக்கு 
வைக்கப்பட்டுள்ள  பேனர்களில் 
நன்றாகவே  உணர முடிகின்றது. 




பிணையில்  வெளிவந்ததற்கே
இப்படி  ஒரு வரவேற்பு  என்றால் 
நிரபராதி  என்று  விடுதலை 
பெற்றால்  என்ன செய்வார்கள்!

2 comments: