சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, December 23, 2011
ஜெ வின் சிறு பிள்ளைத்தனம், அல்பத்தனம்
மு.க.ஸ்டாலினின் அலுவலகத்தைபறிப்பதாகசென்னை மாநகராட்சிதீர்மானம் நிறைவேற்றியுள்ளது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஆக்கபூர்வமானநடவடிக்கைகள் எதுவும் செய்யவே மாட்டேன் என்று ஜெ சபதம் எடுத்து செயல்படுவதாகவே தெரிகிறது. மு.க.ஸ்டாலினுக்கு இலவச விளம்பரமாகவே இந்த முடிவு அமைந்து விட்டது. இன்னொரு சந்தேகமும் எனக்கு எழுகின்றது. நில அபகரிப்பு வழக்குகளில் பலரை உள்ளே தள்ளியது போல மு.க.ஸ்டாலினையும் உள்ளே தள்ள நடந்த முயற்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என முடிவிற்கு வந்து இவ்வாறு செய்துள்ளாரோ என்றும் தோன்றுகிறது. சைதை துரைசாமி சென்னை நகருக்கு ஏதாவது செய்வார் என்று சென்னை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தலைவியின் பாணியில் அவரும் செல்வது வருத்ததுக்குரியது
No comments:
Post a Comment