ஆனந்த விகடன் பத்திரிகை வார இதழில் 2011 ம் ஆண்டின்
டாப் டென் மனிதர்கள் பட்டியலில் இடதுசாரி இயக்கத்தைச்
சேர்ந்த இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும்,
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பெ.சண்முகம்
மற்றும் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின்
அமைப்பாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரே
அந்த இருவர்.
வாச்சாத்தி வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட அந்த
அப்பாவிப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க நடைபெற்ற
உறுதியான போராட்டத்தின் முன்னணித் தோழர்
தோழர் சண்முகம். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
இரு நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை
வழங்கப்பட்ட ஒரே வழக்கு இது.
அதே போல் சமச்சீர் கல்வி விஷயத்தில் ஜெ
குட்டு வாங்க முக்கியக் காரணம் தோழர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு. மெட்ரிகுலேஷன் பள்ளி
ஒன்றை நடத்திக் கொண்டே, மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் நடத்தும் அக்கிரமங்களை தொடர்ந்து
அம்பலப்படுத்தி வருபவர்.
பொதுவாக முதலாளித்துவ ஊடகங்கள்
இடதுசாரி இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களை
கண்டு கொள்ளாது. அன்னா ஹசாரே போன்ற
போலி பிம்பங்களை மட்டுமே முன்னிறுத்தும்.
அதையும் தாண்டி இரண்டு இடதுசாரிகள் இந்த
பட்டியலில் என்றால் அதற்கு அந்த இயக்கம்,
மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டங்கள்
மக்கள் மனதில் அழுத்தமாக தடம் பதித்துள்ளது
என்றுதான் பொருள்.
கடந்த ஆண்டு தோழர்கள் பி. சம்பத் மற்றும் ஜி.லதா
இந்த ஆண்டு தோழர்கள் பி.சண்முகம் மற்றும்
தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள் அங்கீகாரத்திற்காக
பணி செய்பவர்கள் அல்ல. ஆனாலும் அப்பணியை
யாராலும் ஒதுக்கி விட முடியாது.
தோழர் பி.சண்முகம் எங்கள் சங்கக்கூட்டத்தில்
No comments:
Post a Comment