Thursday, December 29, 2011

குடம் பாலில் கலந்திட்ட ஒரு துளி விஷம்



பொதுத்துறை பொது இன்சூரன்ஸை பாதுகாப்போம்

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை, சர்வதேச பொருளாதர நெருக்கடி நிலவும் சூழலில் அன்னிய மூலதனத்தின் ஆதிக்கம் அதிகமாவது சரியல்ல என்று நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா குறித்த தனது அறிக்கையில்  இதனை ஆணித்தரமாக தெரிவித்து விட்டது.

பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்தியரசு கொண்டு வந்த பல்வேறு அம்சங்களையும் நிலைக்குழு நிராகரித்துள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள், இயக்கங்கள், பிரச்சாரங்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.

அதே நேரம் நிலைக்குழு மற்றொரு அபாயகரமான பரிந்துரையையும் அளித்துள்ளது. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக்கொள்ள  தங்கள் பங்குகளை விற்றுக் கொள்ளலாம் என்றும் அரசின் உடமை ஐம்பத்தி ஓன்று சதவிகிததிற்கு குறையாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்றும் சொல்லியுள்ளது. குடம் பாலில் கலந்திட்ட ஒரு துளி விஷமாக இந்த பரிந்துரை அமைந்து விட்டது. இதனை ஏற்க முடியாது, அமுலாவதை அனுமதிக்கவும் முடியாது.

வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சி இது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் மொய்னுல் ஹாசன் மட்டுமே இதனை எதிர்த்து தனது கருத்தையும் எதிர் கருத்தாக (Dissent Note ) பதிவு செய்துள்ளார். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்தியரசு இம்மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கும். இந்த கால வெளியில் இம்முயற்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க வேண்டியது அனைத்து எல்.ஐ.சி, ஜி.ஐ.சி  ஊழியர்களின் கடமை. இதர பகுதி உழைப்பாளி மக்களையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாப்பதும் ஒரு தேச பக்த கடமைதான்.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஐயா அதிமேதாவி அனானி அவர்களே, என்ன உளரல் என்று விளக்க முடியுமா? தாங்கள் என்ன பாஜக வா இல்லை காங்கிரஸா?

    ReplyDelete
  3. போராட வேண்டும் தோழர், அதன் மூலம் மக்களை எழுப்பி விட முயற்சி செய்யுங்கள்... இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  4. பெயர் தெரியாதவருக்கு தாங்கவில்லை. தனியார்மயமாக்க துடிக்கிராரோ?

    ReplyDelete