Wednesday, December 7, 2011

முல்லைப் பெரியார் - கூடங்குளம் முரண்பாடுகள்.



என் மனதை  உறுத்திக் கொண்டிருக்கும்  ஒரு சந்தேகம்.


முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பானது  என நாம் 
சொல்கிறோம். கேரளா ஏற்க மறுக்கிறது என நாம் 
கோபம் கொள்கிறோம். 


கூடங்குளம் அணு உலை பாதுகாப்பற்றது  என்று நாம்
சொல்கிறோம். மத்தியரசு ஏற்க மறுக்கிறது என்று நாம்
கோபம் கொள்கின்றோம். 


முல்லைப் பெரியார் அணையினால்  எங்கள் உயிருக்கு 
ஆபத்து  என்று கேரள மக்கள் சொல்கின்ற போது 
பொறியாளர்கள் சொல்வதை  கேளுங்கள்  என்று 
கூறுகின்றோம். 


கூடங்குளத்தால்  ஆபத்து இல்லை  என்று விஞ்ஞானிகள்
சொன்னால் நாம் ஏற்க மறுக்கிறோம். 


இரண்டிலும் பிரச்சினை ஒன்றுதான். அச்சம் ஒன்றுதான்.
ஆனால் நாம் எடுக்கும் நிலை ஒன்றுதானா? 


இரண்டிலும் இன்று பிரச்சினை  அரசியல்தான் என்பதே 
உண்மை. 


உலகின் தலை சிறந்த அத்துறை சார்ந்த வல்லுனர்கள் 
பரிசீலித்து சொல்லட்டும். அம்முடிவை அனைவரும் 
ஏற்றுக் கொள்வோம். 


உணர்ச்சி மேலோங்கும் போது அறிவு சற்று ஒதுங்கிப் 
போகின்றது. உணர்வை ஒதுக்கி வைத்து அறிவுக்கு 
வேலை கொடுப்பது அனைவருக்கும் நல்லது, 


இவ்வாறு சொல்வதால் தமிழின துரோகி என்ற 
பட்டங்கள் கண்டிப்பாக வரும் என்று தெரிந்தே 
இப்பதிவு.

12 comments:

  1. கூடங்குளம் இயங்கி ஆபத்தானாலும் பதிக்கப் படப்போவது மக்கள்தான்

    அணையை இடித்துவிட்டு தண்ணீர் தராவிட்டாலும் பாதிக்கப் படப் போவது மக்கள்தான்

    இப்படி ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை
    இன உணர்விருந்தால் அறிவிருக்காது என்பது உங்கள் கருத்து

    அறிவே இல்லை என்றால் இன உணர்விருக்காது என்பது என் கருத்து அல்ல
    தந்தை பெரியாரின் கருத்து

    நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எது அறிவு அறிவில்லாதது என்று

    நிச்சயம் உங்கள் என்னோட்டத்தை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    மேலும் நீங்கள் இப்படி விவதிப்பதானால், நீங்கள் கூடங்குளத்திலும், உங்கள் நெருங்கிய விவசாய உறவினர் முல்லைபெரியறு பாசனத்தில் விவசாயம் செய்தும் வாழ்கிறோம் என்று சொல்லுங்கள்.

    நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போல சிந்தனை உள்ள ஒவ்வொருவருக்கும் இதுதான் கேள்வி? இதை நீங்களே உங்கள் மனசட்ச்சியிடம் கேட்டுப் பாருங்கள்

    ReplyDelete
  2. Don't write your own opinion.. see the other side...www.rishvan.com

    ReplyDelete
  3. அணையையும், அணு உலையையும் எப்படி உங்களால் சமமாக பார்க்கமுடிகிறது. இரண்டிலும் அச்சம் மட்டுமல்ல பிரச்சனை. அதன் பின் வரும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு.

    ReplyDelete
  4. அணை என்பது அணு உலையுடன் ஒப்பிட முடியாதது.

    உலகில் தொழில்நுட்பத்தில் உயர்ந்த, வளர்ந்த அணைத்து நாடுகளும் அணு உலையை மூட முடிவு எடுத்துள்ளன. அணை என்பது அப்படி அல்ல.

    அணை உடைந்தாலும் கூட இடுக்கி அணை சென்று அடையும். பல தலைமுறை பாதிப்பு என்பது கிடையாது. மக்கள் அணையைவிட உயரமான இடத்தில் வசிக்கிறார்கள். ஒப்பீடு தவறானது.

    ReplyDelete
  5. எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது... ஆனா வேறு மாதிரி... நில நடுக்கம் வந்தால் அணை உடைந்து விடும் என்று கேரளா மக்கள் கூறும் பொழுது அப்படி நடக்காது என்று மத்திய அரசு சொல்ல வில்லை... அணு உலை நில நடுக்கம் வந்தால் உடைந்து விடும் என்று தமிழக மக்கள் கூறும் பொழுது நில நடுக்கமே வராது என்று மத்திய அரசு அடித்து சொல்கிறது... விஷயத்தை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்த பிறகே கருத்து கூறி இருக்கலாம்...

    முல்லை பெரியார் உடைந்தால், இடுக்கி அணையை நீர் சென்று சேர நான்கு மணி நேரம் ஆகும் என்றும் அந்த நேரத்தில் இடுக்கி அணை நீரை திறந்து விட்டால் எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் முன்னாள் பொறியாளர்கள் ஒரு படம் எடுத்து உள்ளனர்.. நேரம் இருந்தால் பாருங்கள்

    the link for the videos
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eXti8xblCLM

    http://www.youtube.com/watch?v=pDYDBcfziDE&feature=player_embedded

    ReplyDelete
  6. அய்யா

    மக்களின் அச்சம் என்ற ஒரு காரணியைத் தவிற, இரண்டிலும் என்ன ஒற்றுமையைக் கண்டு விட்டீர்கள் என்று விளக்கினால் நலம் பயக்கும்.

    //உணர்ச்சி மேலோங்கும் போது அறிவு சற்று ஒதுங்கிப்
    போகின்றது. உணர்வை ஒதுக்கி வைத்து அறிவுக்கு
    வேலை கொடுப்பது அனைவருக்கும் நல்லது, //
    நன்றாகச் சொன்னீர்கள்.ஆனால் தாங்கள் அதில் அடங்குவீர்களா?
    விஜயன்

    ReplyDelete
  7. ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடிப்பு, அணு சக்தி பற்றிய மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. 07-12-2011 அன்று வெளியிட்டது

    இதனை உறுதி செய்யும் வகையில், அணு உலைகள் வெடித்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகும் நிலையில், ஜப்பானில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அந்நாட்டின் மிகப் பெரிய பால் உற்பத்தி நிறுவனமான Meiji Holdings ன், பால் பவுடரில் சீசியம் என்ற கதிரியக்கப் பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து விற்பனைக்காக அனுப்பப்பட்ட 4 லட்சம் பால் பவுடர் கேன்களை திரும்ப பெறுவதாக Meiji Holdings நிறுவனம் அறிவித்துள்ளது. அணு உலை வெடிப்பின்போது காற்றில் கதிர்வீச்சு பரவியதாகவும் பால் பவுடர் கேன்களை காற்றில் உலரவைத்ததால் கதிரியக்க பொருள் கலந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அபாய அளவுக்கு குறைவாகவே பால் பவுடரில் கதரியக்க தன்மை இருப்பதாக Meiji Holdings நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
    ////////////// பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள் ...... பொதுவில் பதியும் போது ஆராய்ந்து பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  8. "உலகின் தலை சிறந்த அத்துறை சார்ந்த வல்லுனர்கள்
    பரிசீலித்து சொல்லட்டும். அம்முடிவை அனைவரும்
    ஏற்றுக் கொள்வோம்".

    நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? வர்க்க சமுதாயத்தில் அதுவும் கொலை வெறிகொண்ட முதலாளித்துவ சமுதாயத்தில் துறை சார்ந்த வல்லுனர்கள் அவர்களுடைய கருத்துக்களை சொல்ல முடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரேயானால் அவர் பொதுவுடமைவாதியாக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் எங்கே இருக்கிறார்? அடையாளம் காட்டமுடியுமா?

    அது சரி! எதற்கு நிபுணர்கள் கருத்தை நம்பியிருக்கிறீர்கள்? Nuclear Fission பற்றி கொஞ்சம் படியுங்களேன். நீங்களே முடிவுக்கு வரமுடியும்.

    கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?http://hooraan.blogspot.com/2011/11/blog-post_21.html இதையும் படியுங்கள். சொஞ்சம் புரியும். மேலும் விரிவாகத் தேவை எனில் அணு அறிவியலைப் படியுங்கள்.

    மக்களின் அச்சம் என்ற ஒரே அச்சாணியில் கூடங்குளத்தையும் முல்லைப் பெரியாரையும் இணைத்திருப்பது அறிவுக்குப் பொருந்தாது.

    "பிரச்சனை" "இனம்" என்றெல்லாம் பூடகமாகப் பேச வேண்டாமே. வெளிப்படையாக, விரிவாகப் பேசுங்கள். விளங்கட்டும். விரிவாகப் பேசினால் மக்களே முடிவெடுப்பார்கள்.

    இதெல்லாம் உங்களுக்குத் சுத்தமாகத் தெரியாது என சொல்ல முடியாது. நீங்கள் நம்பும் அரசியல் தலைமையோடுதானே ஒத்துப் போக முடியும்! உங்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

    ReplyDelete
  9. "உலகின் தலை சிறந்த அத்துறை சார்ந்த வல்லுனர்கள்
    பரிசீலித்து சொல்லட்டும். அம்முடிவை அனைவரும்
    ஏற்றுக் கொள்வோம்".

    நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? வர்க்க சமுதாயத்தில் அதுவும் கொலை வெறிகொண்ட முதலாளித்துவ சமுதாயத்தில் துறை சார்ந்த வல்லுனர்கள் அவர்களுடைய கருத்துக்களை சொல்ல முடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரேயானால் அவர் பொதுவுடமைவாதியாக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் எங்கே இருக்கிறார்? அடையாளம் காட்டமுடியுமா?

    அது சரி! எதற்கு நிபுணர்கள் கருத்தை நம்பியிருக்கிறீர்கள்? Nuclear Fission பற்றி கொஞ்சம் படியுங்களேன். நீங்களே முடிவுக்கு வரமுடியும்.

    கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?http://hooraan.blogspot.com/2011/11/blog-post_21.html இதையும் படியுங்கள். சொஞ்சம் புரியும். மேலும் விரிவாகத் தேவை எனில் அணு அறிவியலைப் படியுங்கள்.

    மக்களின் அச்சம் என்ற ஒரே அச்சாணியில் கூடங்குளத்தையும் முல்லைப் பெரியாரையும் இணைத்திருப்பது அறிவுக்குப் பொருந்தாது.

    "பிரச்சனை" "இனம்" என்றெல்லாம் பூடகமாகப் பேச வேண்டாமே. வெளிப்படையாக, விரிவாகப் பேசுங்கள். விளங்கட்டும். விரிவாகப் பேசினால் மக்களே முடிவெடுப்பார்கள்.

    இதெல்லாம் உங்களுக்குத் சுத்தமாகத் தெரியாது என சொல்ல முடியாது. நீங்கள் நம்பும் அரசியல் தலைமையோடுதானே ஒத்துப் போக முடியும்! உங்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

    ReplyDelete
  10. நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் வீரியத்தைப் பொறுத்து அணு உலையோ அல்லது அணையோ உடையலாம் அல்லது அவற்றில் சேதங்கள் ஏற்படலாம் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அணை உடைந்தால் அதனால் வெளியேறு நீரை மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும். முல்லைப் பெரியாறு அணை அவ்விதம் இருப்பதாகத்தான் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அணு உலை சேதமடைந்தால் பாதிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகப்பு ஏற்பாடுகள் செய்ய முடியும். காற்றை வழிமாறச் செய்வீர்களா? மேலும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்றால் அது புதிய அணைக்கும் ஏற்படாதா? எனக்கென்னவோ கூடங்குளத்தை வைத்து முல்லைப்பெரியார் அணைப் பிரச்சினையை மத்திய அரசுதான் தூண்டிவிடுகிறது என கருதுகிறேன்.

    ReplyDelete