பிரம்மாண்டமான
வினாயகர் சிலைகள், காதைக் கிழிக்கும் குத்துப் பாடல்கள் ( மற்ற ஊர்களில் எப்படி
என்று தெரியாது. வேலூரில் முதல் ஒரு மணி நேரம் மட்டும்தான் பக்திப்பாடல்கள், அதன்
பின்பு ஒன்லி குத்து சாங்ஸ் ) அவர் கையிலே
திணிக்கப்படும் ஆயுதங்கள், வினாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், அதிலே நிகழ்த்தப்படும்
வெறுப்புரைகள், கலவரத்திற்கு திட்டமிடும் நோக்கிலேயே கேட்கும் ஊர்வலப்பாதைகள்,
மாசு படும் நீர் நிலைகள் இவைகள் எல்லாமே வினாயகர் சதுர்த்தி என்றால் ஒரு அச்சத்தை
ஏற்படுத்தினாலும் இனிமையான ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்டு.
அது வினாயகர் சதுர்த்திக்காக செய்யப்படும் கொழுக்கட்டை. மற்ற
நாட்களில் செய்யலாம் என்றாலும் யாரும் செய்வதில்லை. ஏன்
இது போன்ற தினங்களில் கூட அதற்குரிய தின்பண்டங்கள் உண்டா
என்ற கேள்வியை நான் கேட்டாலும் நீங்கள் என்ன பூஜையா
செய்யப் போகின்றீர்கள் என்ற பதில் வந்தாலும் கூட, அந்த
பொருள் தயாராகி விடும்.
நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை, ஞாயிறுக் கிழமையும்
பெண்களுக்கில்லை என்பது பணிக்குச் செல்லும் மகளிரின்
நிலை குறித்து கவிஞர் கந்தர்வன் பாடிய கவிதை. ஞாயிறு
போலவே மற்ற விடுமுறை நாட்களும் பெண்களுக்கும் இல்லை
என்பதை உண்மையாக்கும் வண்ணம் என் மனைவி நேற்று
செய்த சுவையான கொழுக்கட்டைகள் இங்கே.
நாவிற்கு இனிய கொழுக்கட்டைகள் சாப்பிட வாய்ப்பு கிடைப்பதற்கு
மட்டும் வினாயகர் சதுர்த்தி வந்தால் பரவாயில்லை என்று
தோன்றுகிறது.
முதுகு ஒடிய ஒடிய முழுமையாய் கொழுக்கட்டை செய்தது என்
மனைவிதான். அதற்கு பூரணம் கிளறித் தந்தது யார் என்று மட்டும்
நான் சொல்ல மாட்டேன்.
பூரணம் செய்தவர் சரியில்லை ! பாத்திரத்தின் அடியில் நீர் தங்கியிருக்கே ! கொழுக்கட்டை சீக்கிரம் ஊசி போய்விடும் ! இன்னும் கொஞ்சம் வதக்கி இருந்தால் நீர் பிரிந்திருக்காது ! ---காஸ்யபன்.
ReplyDeleteஅது நீர் கிடையாது தோழர். வெல்லப்பாகு. ஆனால் ஒன்று. இப்படி ஒரு பின்னூட்டம் நீங்கள் போட்டுள்ளதாக சொன்னதும் என் மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ReplyDelete"எங்கப்பன் குதிருக்குள் இல்லை " என்பதை உங்கள் வார்த்தைகளே சொல்லிவிட்டன. இருந்தாலும் தோழரின் உதவியின்றி கொழுக்கட்டை (கொழுகொட்டை?) தயாராகவில்லை என்பது மட்டும் புரிகிறது.
ReplyDeleteகொழுக்கட்டை யா கொட்டையா ?விநாயகருக்கு பாட
ReplyDeleteகட்டை .௩௦ ஆண்டுகளில் ஹிந்துமத வளர்ச்சி.பல லக்ஷங்கள் தண்ணீரில் ;பல லக்ஷக்கள் தண்ணீரில். ஒன்று மூட நம்பிக்கை.மற்றொன்று அரசாங்கம் மக்களை மூடனாக்கும் தண்ணீர்.
நமக்கென்ன? எந்த கட்டை எங்கே போனால் என்ன. கொழுக்கட்டை தினம் சாப்பிட்டால் கொழுப்பு சாரி பேட் ஹிந்தியில் வயிறு fat கொழுப்பு ஏறும். அத்துதான் நம்முன்னோர் வருடம் ஒருநாள். நான் குழந்தையாய் இருக்கும் பொழுது அன்று முழுவதம் தேங்காய்,எள்ளு ,உளுந்து,இட்லி தான் மறுநாள் உளுத்தங் கொழுக்கட்டை உதிர்த் தாளித்து அது தனி சுவை. இன்றும் தாளிப்பு விநாயகர் சிலை ௯ லக்ஷம் ஒன்று ஆழ்கடலில் போட.ஒன்று சுவை.மற்றொன்று மனச் சுமை.கண்டு கொள்ளாமல் இருக்க நாம் ஜடமா?மத உணர்வு.ஐயகோ.
//பூரணம் கிளறித் தந்தது யார் என்று மட்டும்நான் சொல்ல மாட்டேன்.//
ReplyDeleteஅது தானே படத்தில் உள்ள இப்படி ஒரு நல்ல கொழுக்கட்டை எப்படி உருவாச்சு என்று பார்த்தேன்! முக்கியமான ஒருவரின் பங்களிப்பும் இருந்திருக்கிறது :)