Thursday, September 26, 2013

இரண்டு விரல்களில் ஏதாவது ஒன்றா?




இரண்டு விரல்களில் ஒன்றைத் தொடு,
2014 தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்க்ச்...
மற்ற விரல்கள் இருந்தும்
கார்ப்பரேட் மீடியாக்கள்
பரிந்துரைப்பதென்னவோ
இரண்டைத்தான்....

ஊழலால், லஞ்சத்தால்
விரல்கள் இரண்டுமே
புண்ணாகி ரணமான நிலையில்...

வறுமை வெறும் மனனிலைதான்
என சாக்கு சொன்னது ஒன்று!
நானே ராம்போ, வளர்ச்சிக்கு வழிகாட்டி
என மார்தட்டியது மற்றொன்று!!

அரக்க பரக்க உணவு மசோதா மூலம்
வாக்கு பெற நினைக்கிறது ஒன்று!
நிர்வாகத்தின் சக்கரங்களின்
நசுங்கும் நாய்க்குட்டிக்காக
வருந்துவதாகச் சொல்கிறது மற்றொன்று!!

தவறான பொருளாதாரத்தை
இரண்டுமே சொந்தம் கொண்டாடுது,
நொந்து போகிறது நம் ஆத்மாதான்....

சீர் கெட்ட இவ்விரண்டில்
எதைத் தொடுவது எதை விடுவது?
குழப்பமே வேண்டாம்....
மாற்றுப்பாதையை முன்மொழியும்
இடது விரலைப் பற்றிக் கொள்!

                      கவிதைக்குச் சொந்தக்காரர்
                           - மதுரை பாரதி

4 comments:

  1. முதல் கவிதையில் ஏதாவது ஒரு பக்கம் இருக்கச் சொன்னீர்கள்.
    இந்தக் கவிதையில் மூன்றாவதாய் ஒன்றைச் சொல்கின்றீர்கள்,
    ஏன் குழப்புகிறீர்

    ReplyDelete
  2. பிரச்சனை என்னவென்றால், அந்த இடது விரல் கடைசியில் நீங்கள் தவிர்க்கச் சொன்ன ஒரு விரலை போய் பற்றிக்கொள்கிறது! அதற்க்கு அந்த விரலுக்கே போட்டுவிடலாமே. இடையில் நீங்கள் எதற்கு?

    ReplyDelete
  3. இதில் குழப்பம் ஏதுமில்லை. இரு விரலும் புண்ணான பிறகு எதைப் பற்றுவது ? எனவேதான் "இடதை " அதாவது இடதுசாரிகளை பற்றிக் கொள்ள சொல்கிறார். இதில் குழப்பம் எங்கிருந்து வந்தது ?

    ReplyDelete