Monday, September 30, 2013

எல்லா மொழிகளிலும் வில்லன்கள் முட்டாள்தானா?

புதுவையிலிருந்து வேலூர் ஒரு ஆம்னி பஸ்ஸில் வந்தே. அது
ஹைதராபாத் செல்லும் பேருந்து. ஆகவே ஒரு தெலுங்கு படம்
போட்டார்கள். பெயர் தெரியாத அந்தப்படம் ஒரு மரண அவஸ்தை.

கிளைமாக்ஸில் ஹீரோவை கட்டிப் போட்டு அடிக்கிறார்கள்.
வில்லன், அவனின் ஆட்கள் அனைவரது கையிலும் ஏ.கே 47
துப்பாக்கி இருக்கிறது. ஆனால் ஹீரோ பஞ்ச் டயலாக் பேசியதும்
அவன் கைகட்டை அவிழ்த்து விட்டு சண்டை போட ஆரம்பிக்கிறார்கள்.

ஹீரோ வில்லனை அடித்து மீண்டும் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு
முன்பு வேலூர் வந்து விட்டதால் நான் தப்பித்து விட்டேன்.

ஹீரோவை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளாமல் அவனிடம்
அடி வாங்கும் அளவிற்கு வில்லன்கள்  ஏன் எல்லா மொழிகளிலும்
முட்டாளாகவே இருக்கிறார்கள்.

1 comment:

  1. தவறு உங்கள் மீதுதான். பெரும்பாலான தெலுங்கு படங்கள் இப்படித்தான் வரும். பயண நேரத்தில் புதுத்தகம் (எழுத்து பிழை அல்ல. புது புத்தகம் = புதுத்தகம்) படித்து வந்திருந்தால், சங்க சுடருக்கு ஒரு நூல் அறிமுக உரையாவது கிடைத்திருக்கும். வாய்ப்பை தவற விட்ட நீங்களே குற்றவாளி. என்ன என் கருத்து சரிதானே தோழரே ?

    ReplyDelete