Saturday, September 21, 2013

ஏ.சி யின் விலை எண்பது ரூபாய் ? நிஜம் நிஜம்தான்

என்ன தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதா?

இவ்வளவு குறைவாக ஏ.சி கிடைக்கிறதா என்று
தலை சுற்றுகிறதா? கிள்ளிப் பார்த்துக் கொண்டீர்கள்தானே?

உங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் வாங்கிப்
பொருத்தலாம் என்று திட்டமிட்டீர்கள்தானே?

ஆனா அம்மா கரண்ட் தரமாட்டாங்க, தந்தாலும் 
கட்டணம் ஷாக்கடிக்குமே என்ற கவலையும் வந்தது அல்லவா?

இவ்வளவு குறைவாக எப்படி ஏ.சி கிடைக்கும், இதில் ஏதாவது
தில்லுமுல்லு இருக்குமோ என்றும் கூட யோசித்திருப்பீர்கள்.

இது பத்து அல்லது பதினைந்து நிமிடம் நீங்கள் குளிர்சாதனம்
செய்யப்பட்ட அறையில் இருப்பதற்கு வசூலிக்கும் கட்டணம்.



ஹோட்டல் சரவணபவன் புரட்டாசி பிரம்மோற்சவத்தை
முன்னிட்டு தலைவாழை இலை சாப்பாடு என்று போட்டு
ஒரு கவர்ச்சிகரமான(!)  திட்டத்தை அறிவித்துள்ளது. 
அதன்படி 23 ஐட்டங்கள்  95 ரூபாய் என்று அறிவித்துள்ளது.
இருபத்து மூன்று ஐட்டங்களில் ஊறுகாய், மோர் மிளகாய்,
பொறியல், கூட்டு, குழம்பு, ரசம், சாதம், அப்பளம், போன்ற
வழக்கமான பொருட்கள் எல்லாமே அடக்கம்.

இது என்ன புதிதாக இருக்கிறதே, கட்டுப்படியாகுமா என்று
யோசிக்கும் போது கீழேயே இன்னொரு அறிவிப்பு.

அங்கதான் நிக்கறாரு நம்ம அண்ணாச்சி

ஆனால் இதே ஐட்டங்களை ஏ.சி ரூமில் சாப்பிட வேண்டுமானால்
அதன் விலை ரூபாய் ரூபாய் 175.00

பொருட்களின் தயாரிப்பு செலவில் மாற்றம் இருக்காது.
சுவையிலோ, தரத்திலோ மாற்றம் இருக்காது.
ஆனால் பத்து நிமிடம் ஏ.சி யில் உட்கார்ந்து சாப்பிட
கூடுதலாக எண்பது ரூபாய் வசூலிக்கிறார்கள். 

முதலில் இத்திட்டத்தை பார்க்கும்போது
லாபத்தில் நஷ்டம் என்று நினைத்திருந்தேன்.
இந்த ஏ.சி விஷயத்தை பார்க்கும்போது 
லாபத்தில் லாபம், கொள்ளை லாபம் 
என்பது புரிந்தது.

ஏனென்றால் எண்பது ரூபாய் கூடுதலாக கொடுத்தும்
மக்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இதுவே சென்னையில் ஏ.சி ரூமில் 120 ரூபாய்தான் என்று
ஒரு பதிவர் நேற்று எழுதியிருந்தார்.

ஆக சென்னையை விட வேலூரில் உள்ளவர்கள் மிகப் பெரிய
பணக்காரர்கள். அதனால் அவர்களிடம் சென்னைக்காரர்களை
விட கூடுதலாக 55 ரூபாய் வாங்குகிறார்கள்.

வேலூர் மக்களே நீங்கள் ரொம்ப நல்லவர்கள்,
நல்லாவே தாங்கறீங்க.
 
 



 

No comments:

Post a Comment