Sunday, September 29, 2013

தரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்

ஊரில் உள்ள  தலைவர்களுக்கெல்லாம் திறந்த மடல் எழுதித் திரிந்த
தமிழருவி மணியனுக்கு  ஒரு  திறந்த மடல் எழுதும் தேவை
உருவாகும் என்று சிந்தித்ததேயில்லை. 

தங்களின் தமிழ் அறிவை அரசியலுக்காக விற்றுக் கொண்டிருக்கும் 
பல பேச்சு வியாபாரிகள் மத்தியில் அறிவு ஜீவியாக உலா வந்து
கொண்டிருந்த உங்கள் முகமுடி இவ்வளவு சீக்கிரம் கழண்டு விழும்
என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

க.சுப்புவிற்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிகமாக கட்சி
மாறிய ஒருவர் என்ற பெயர் உங்களுக்கு இருந்தாலும் உங்கள்
தமிழாற்றலால், தேர்ந்த வழக்கறிஞர்களை விட திறம் மிகுந்த
வாதங்களால்  உங்களை கருத்துக்களைப் பற்றி சிந்திக்க வைத்து
உங்களைப் பற்றி சிந்திக்காமல் தடுத்து விட்டீர்கள். லாவகமாக
தவிர்த்து விட்டீர்கள்.

அதனால்தான் நீங்கள் சொன்ன கருத்துக்களே இப்போது 
முன்னுக்கு  வந்து உங்கள் பொய் முகத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.  சோ,   சுப்ரமணிய சாமி வரிசையில் 
புதிய கூட்டணித் தரகர் என்ற  புதிய தொழிலை 
தொடங்கியுள்ளீர்கள்.

நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று சுற்றி வளைத்து
கடைசியில் வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள். ஆனால்
அதையும் எவ்வளவு அழகாக நியாயப்படுத்துகின்றீர்கள்.
2016 ல் தமிழகத்தில் மாற்றம் வருவதற்காக ஒரு கூட்டணி
இப்போதே வர வேண்டுமாம். அதனால் மோடி பிரதமரானால்
பரவாயில்லை என்பது உங்கள் வாதம்.

உங்கள் வீடு பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த
இந்தியாவும் பற்றி எரிய வேண்டுமா? நல்லெண்ணம் கொண்ட
மனிதரய்யா நீங்கள். நீங்கள் விரும்புகிற மதிமுக, தேமுதிக, பாஜக,
பாமக கூட்டணி உருவானாலும் அது ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே
கிடையாது என்பது அரசியலிலேயே ஊறிப் போயிருக்கிற
உங்களுக்கு என்னை விட நன்றாகவே தெரியும்.

2016 என்று  தூண்டில் போட்டாலும்  நீங்கள் மீன் பிடிக்க நினைப்பது
என்னவோ 2014 மக்களவைத் தேர்தலுக்குத்தான். பாஜக வைப் பற்றி
உங்கள் கருத்து என்ன?

முகநூலில் ஒரு நண்பர் நீங்கள் கூறியதை அப்படியே நினைவுபடுத்தி
பதிவு செய்திருந்தார். 

அதை நீங்களும் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.




தமிழகத்தில் தி.மு.-வுக்கு மாற்று ...தி.மு.. என்பது எப்படி அரசியல் சாபமோ, காங்கிரஸுக்கு மாற்றாகத் தேசிய அளவில் பா... இருப்பதும் அதே போன்ற சாபம்தான். அதிகாரத்தைச் சுவைக்கும் வரை பற்றற்ற புத்தரைப் போல் தோற்றம் காட்டிய பா..., ஆட்சி அரியாசனத்தில் அமர்ந்ததும் 'காங்கிரஸுக்கு எந்த வகையிலும் தாங்கள் இளைப்பில்லை காண்என்று அதன் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு நன்றாக உணர்த்தி விட்டனர். பங்காரு லட்சுமணன் தொடங்கி, எடியூரப்பா வழியாக, நிதின் கட்காரி வரை பா..-வின் நிஜமுகம் தெரிந்து விட்டது. இப்போது, 'கோத்ராரத்தக் கறை படிந்த மோடி அதன் முகமூடி ஆகிவிட்டார்.  பாவம் இந்திய வாக்காளர்கள்

இப்போது மட்டும் பாஜக எப்படி உத்தம சிரோண்மணி ஆனார்கள்?

ஊழலிலும் சரி, மக்களை வதைக்கும்  பொருளாதாரக் 
கொள்கைகளிலும்  சரி இரண்டு கட்சிகளுக்கும் 
வேறுபாடு கிடையாதுஎன்பது தெரியாத 
பச்சிளம் பாலகர் அல்ல நீங்கள். ஆனால் மத வெறி
என்ற அம்சத்தால் இன்னும் மோசமாக காட்சியளிக்கிறது பா.ஜ.க.

நரேந்திர மோடியை ஆதரிக்க வேண்டும் என்ற மோகத்தில் உங்கள்
நாக்கு எப்படியெல்லாம் விளையாடியுள்ளது?

அவருக்கு நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று
பட்டியல் போட்டுள்ளீர்கள்.

இதோ அவை இங்கே


வைகோவும் விஜயகாந்த்தும் பா..-வுடன் சேர்ந்து நிற்பதற்கு முன், சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

 'பாபர் மசூதி பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன், அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தை வளர்த்தெடுக்கக் கூடாது.  

பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தக் கூடாது.  


காஷ்மீருக்குத் தனிச்சலுகை தரும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவில் கைவைக்கக் கூடாது.  

ஒரு தேசம் இந்தியா என்பதில் இருகருத்து இல்லை. ஆனால், இந்துக்களும் சிறுபான்மை சமயங்களைச் சார்ந்தவர்களும், இந்தியர் என்ற வகையில் சமஉரிமையும் சமவாய்ப்பும் பெறுவதில் எந்த வேற்றுமையும் இருக்கலாகாது.  

ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளைக் காப்பதில் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து இந்தியா உணர்வுபூர்வமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்என்று வலியுறுத்த வேண்டும்.  

வகுப்பு வாதத்தில் ஈடுபடாத நிலையில், மோடி பிரதமராவதைத் தயக்கமின்றி வரவேற்கலாம்.

அப்படி நிபந்தனை விதிக்கும் தைரியம் இவர்களுக்குக் கிடையாது
என்பதும் தேர்தல் ஆதாயத்திற்காக அவற்றை ஏற்றுக் கொண்டாலும்
பிறகு அதை மீறும் கட்சிதான் பாஜக என்பது உங்களுக்கு புரியாதா
என்ன? இப்படிப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அதற்குப்
பிறகு அது பாரதீய ஜனதா கட்சியா என்ன?


உலக இலக்கியங்களைப் படித்துள்ள உங்களுக்கு "சிறுத்தையின்
புள்ளிகளை மாற்ற முடியாது" என்று ஷேக்ஸ்பியர் சொன்னது
நினைவில் இல்லையா என்ன?

இந்த மகா கூட்டணியில் பாமக இணைய வேண்டும் என்று 
விருப்பம்தெரிவித்துள்ளீர்கள். அன்னம் விடு தூது, 
காகம் விடு தூது போலதாவும் குரங்கு தூதாக 
உங்கள் தூது தொடங்கியுள்ளது. 

மருத்துவர் ஐயாவிற்கு நீங்கள் எழுதியுள்ள கடிதங்களை அதற்குள்
மறந்து விட்டீர்களா என்ன? 

மதுவின் போதைக்கு எதிராக குரல் கொடுப்பதாக சொல்லும் 
நீங்கள் மதுவை விட மோசமான ஜாதி வெறி சக்தியையும் 
மத வெறி சக்தியையும் கரம் கோர்க்க வைக்க 
ஆசைப்படுகிறீர்கள். தமிழகத்தில் நச்சை
பரவச் செய்ய அவ்வளவு ஆசை உங்களுக்கு.

மதுவின் போதை அக்குடும்பத்தை அழிக்கும் என்றால் 
இவர்களின் வன்ம அரசியல் பல தலைமுறைகளையே 
முடமாக்கி விடும் என்பது தெரிந்தும் அதை 
செய்கிறீர்கள் என்றால் உங்களை போலித்தனமான
மனிதர் என்று சொல்வது கூட தவறு.
 அபாயகரமான சந்தர்ப்பவாதி.

உங்களின் கீழ்த்தர அரசியலுக்கு ஜெயகாந்தன் பாட்டை வேறு
துணைக்கு அழைத்துள்ளீர்கள். 

அதையே நானும் உங்களுக்காக கொஞ்சம் மாற்றிப் பாடுகிறேன்

தாழ்ந்ததைச் சொல்லுகிறேன்- நீங்கள்
தரங்கெட்டதைச் சொல்லுகிறேன் - இங்கே
தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் - உமக்குத்
தலையெழுத்தென்றால் - அதை
தமிழகத்திற்கும் செய்வதுண்டோ?

தம்பிடிக்காக மட்டுமே இதை செய்கிறீர்கள் என்று குற்றம் சுமத்த
என்னிடம் ஆதாரம் இல்லை. ஆதாயம் இல்லாமல் இந்த தரகு
வேலைக்கு சென்றிருக்க மாட்டீர்கள் என்பதை  மட்டும்  எனது
உள்ளுணர்வு சொல்கிறது.

அஹிம்சையை போதித்த காந்தியின் பெயரை  ஏன் இன்னும்
உங்கள் இயக்கத்தில் வைத்துள்ளீர்கள்?

நரேந்திர மோடியின்  நரவேட்டை புகழ்பாடும் 
 புரோக்கர் இயக்கம் என்று மாற்றி விடுங்கள். 




30 comments:

  1. இவனெல்லாம் முற்போக்கு,இவனெல்லாம் பிற்போக்கு.இவன் தரமானவன்,இவன் தரங்கெட்டவன்.இவனெல்லாம் வலதுசாரி,இவனெல்லாம் இடதுசாரி .என்றைக்குதான் இந்த லேபல் ஓட்டற வேலையை விட்டு உருப்படியான வேலைகளை தோழர்கள் செய்யபோகிறார்களோ.

    ReplyDelete
  2. சரியான கேள்விகள். வாராவாரம் ஆரவாரமாய், ஏதாவதொரு பத்திரிகையில் எழுதிக்கொண்டும், பேட்டி கொடுத்துக் கொண்டும் இருக்கும் திரு தமிழருவி மணியன் அவர்கள் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலளித்துத் தனது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். அல்லது அவரது இயக்க நண்பர்களாவது பதில் தரவேண்டும்.

    ReplyDelete
  3. unkalaipol unkal katchiyaipol niraiya kapada vedatharigal irukkathan seikirarkal etharkkaga gonkirasai silasamaiyam thittuvathupol nadikkinreergal neradiyagave Ragulukku vottu ketkka vendiyathuthane

    ReplyDelete
  4. நீங்கள் எழுதியதிலேயே பல முரண்கள்..

    முதலில் நீங்கள் எழுதியது..
    //
    பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தக் கூடாது.

    காஷ்மீருக்குத் தனிச்சலுகை தரும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவில் கைவைக்கக் கூடாது.
    //
    அதற்க்கு அடுத்த வரி..

    //
    ஒரு தேசம் இந்தியா என்பதில் இருகருத்து இல்லை. ஆனால், இந்துக்களும் சிறுபான்மை சமயங்களைச் சார்ந்தவர்களும், இந்தியர் என்ற வகையில் சமஉரிமையும் சமவாய்ப்பும் பெறுவதில் எந்த வேற்றுமையும் இருக்கலாகாது.
    //
    :-)

    ReplyDelete
  5. "நல்லெண்ணம் கொண்ட
    மனிதரய்யா நீங்கள். நீங்கள் விரும்புகிற மதிமுக, தேமுதிக, பாஜக,
    பாமக கூட்டணி உருவானாலும் அது ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே
    கிடையாது என்பது அரசியலிலேயே ஊறிப் போயிருக்கிற
    உங்களுக்கு என்னை விட நன்றாகவே தெரியும்."

    பாஜக ஆட்சியை பிடித்தால் தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம் .............

    ReplyDelete
  6. காலை முதல் கணிணி வேலை செய்யவில்லை. இப்போது புதுவை புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நாளை உங்கள் அனைவருக்கும் பதில் தருகிறேன்

    ReplyDelete
  7. மிஸ்டர் தமிழருவி மணியன் ! ப்ரோக்கரேஜ் கமிஷன் எவ்வளவு ? சீட்டு பேரம் படிவதற்கு ஏற்பவா ? சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

    ReplyDelete
  8. //bandhu said...
    நீங்கள் எழுதியதிலேயே பல முரண்கள்..//

    தமிழருவி மணியனின் மிக பெரிய முரண்பாடுகளே அவை.
    //பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தக் கூடாது
    காஷ்மீருக்குத் தனிச்சலுகை தரும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவில் கைவைக்கக் கூடாது. //
    ஆனா
    //ஒரு தேசம் இந்தியா என்பதில் இருகருத்து இல்லை. ஆனால், இந்துக்களும் சிறுபான்மை சமயங்களைச் சார்ந்தவர்களும், இந்தியர் என்ற வகையில் சமஉரிமையும் சமவாய்ப்பும் பெறுவதில் எந்த வேற்றுமையும் இருக்கலாகாது//

    ReplyDelete
  9. //உங்கள் வீடு பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த
    இந்தியாவும் பற்றி எரிய வேண்டுமா? //
    சரி.. காங் வந்தால் எல்லாம் சுபிட்சமாக இருக்கும் என்பதைச் சொல்லுங்கள்.. அப்படி இல்லை என்றால் வேறு யாருக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்? இருவரை தவிர வேறு ஒருவருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றால் யாருக்குப் போடவேண்டும் அப்படிப் போட்டால் மூன்றாவது வந்துவிடுமா? வந்தால் நிற்குமா என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்.. அல்லது ஓட்டே போடவேண்டாம் என்கிறீர்களா? அதையாவது சொல்லுங்கள்
    R Chandrasekaran

    ReplyDelete
  10. நடு நிலைவாதிபோல காட்டிக்கொள்பவர்தான் இவர்.மிகசரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  11. எல்லாரையும் அந்தப் பழைய கன்னாடிகொண்டு பார்க்கும் தமிழனின் எண்ணம் என்று தான் மாறுமோ ,பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே முன்னேற்றம் ,தூற்றுவோர் தூற்றட்டும் ஏசுவோர் ஏசட்டும் ,அது அவர்களின் உரிமை ,முன்னெடுத்துச் செல்வோர் சென்றுகொண்டே இருப்பார்கள் ,மக்கள் அதற்குப் பதில் சொல்வார்கள் ..

    ReplyDelete
  12. //க.சுப்புவிற்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிகமாக கட்சி
    மாறிய ஒருவர் என்ற பெயர் உங்களுக்கு இருந்தாலும் உங்கள்
    தமிழாற்றலால், // ஆரம்பத்திலேயே சொதப்பலான தாக்குதலை வைத்திருக்கிறீர்கள், இனி முழுக்கட்டுரையையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை, முன்முடிவை எடுத்து தாக்கவேண்டூம் என்று முடிவெடுத்துவிட்டு தனிமனிததத் தாக்குத்லை தொடுத்திருக்கும் உங்களுக்கு பதில் சொல்வது வெட்டிவேலை என்றாலும், இந்த முதல் கருத்திலேயே நீங்கள் எவ்வளவு அரசியல் புரிதல் அற்றவர் என்பதை விளக்கவேண்டி யிருக்கிறது.

    விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழகத்தில் இருக்கக் கூடிய நேர்மையான தலைவர்களில் ஒருவரான தமிழருவி மணியன் அவர்கள் தனது கல்லூரிக் காலத்தில் காங்கிரஸ் பிளவுபட்டு காமராஜர் த்லைமையிலான ஸ்தாப காங்கிரசில் காமராசரின் அழைப்பிற்கு இணங்க இணைந்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

    காமராஜர் மறைவிற்கு பிறகு ஸ்தாபன காங்கிரசில் சிலர் இந்திரா காங்கிரசில் இணைந்துவிட ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாகட்சியாக மாறுகிறது. பின்னர் மூப்பனார் அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறி காமராஜரின் தொண்டர்களை ஒன்றிணைக்கிறார். அப்படி அவரின் அழைப்பிற்கேற்ப மணியன் அய்யாவும் தமாகவில் இணைகிறார். பின்னர் தமாகா காங்கிரசோடு மீண்டும் இணைகிறது.

    இனப்படுகொலையில் காங்கிரசின் பங்களிப்பை எதிர்ந்து மணியன் அய்யா அவர்கள் காங்கிரசை தூக்கி எறிந்துவிட்டு பதவியையும் துறந்துவிட்டு தனியாக அணி அமைக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மணியன் அவர்கள் காமராஜர் தொண்டராகத்தான் இருக்கிறார். அவரை ஒவ்வொரு கட்சியாக மாறுபவர் என்று நீங்கள் குறிப்பிடும்போதே நீங்கள் எவ்வளவு அரசியல் புரிதல் அற்றவர் என்று விளங்கிவிடுகிறது. இதற்குமேலும் உங்களது அபத்தமான உளறல்களுக்கு காந்தியமக்கள் இயக்கத்தவர்கள் பதில் அளிக்காமல் இருப்பபதே அவர்களின் தகுதிக்கு சரியானது ஆகும்.

    ReplyDelete
  13. திரு முத்து கிருஷ்ணன்- எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்து ஓடும் தந்திரத்தை நன்றாகவே பயின்றுள்ளீர்கள்.
    முக நூலில் ஒரு நண்பர் போட்ட பின்னூட்டம் உங்களுக்கு சமர்ப்பணம்

    Radhakrishnan Saijayaraman sila நாட்களுக்கு முன் தான் தமிழருவி மணியனை புதுவையில் ஒரு நிகழ்ச்சியில் சந்திதேன் . அப்போது அந்த நண்பர்களுக்கு மத்தியில் என்னை சுட்டிக்காட்டி இவர் காமராஜரின் தொண்டன் இவருடன் தனியாக புகைப்படம் எடு என்று கூறினார் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த நண்பர்கள் மத்தியில் சில முகவா நண்பர்களும் இருந்தார்கள் . அவர்களும் அலுவலகத்தில் இதை பற்றி சொல்ல எனக்கோ உற்ச்சாகம் பிடிபடவில்லை. ஆனால் தமிழருவி மணியன் யாரோ ஒருவருக்கு பதவி தேட கூட்டணி உருவாக்கும் முயற்ச்சியில் இருக்கிறாராம் . அந்த செய்தியை படித்ததும் இடிந்து போனேன் . ஏனென்றால் நாங்கள் மாணவர் பருவத்தில் காமராஜரை ஒரு தெய்வத்தை போல் பூஜித்தவர்கள். இப்போதும் கூடத்தான் . ஆனால் அன்றைய காலகட்டத்தில் டில்லியில் காமராஜ் தங்கியிருந்தபோது அவரின் வீட்டை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது நல்லவேளையாக காமராஜர் உயிர் தப்பினார். அந்த கும்பல் எது என்பதும் அந்த கும்பலின் இப்போதைய வடிவம் எது என்பதையும் எங்களை போன்று காமராஜரை வணகுபவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழருவி மணியனுக்கு இன்னமும் நன்றாகவே தெரியும. நீங்க கூடவா தமிழருவி மணியன் என்று கேட்க தோன்றுகிறது. நிற்க நான் பெருமையாக அவருடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை தேவையில்லை என்று சொல்லி விட்டேன். ஏதோ என்னால் முடிந்த எதிர்ப்பு.

    ReplyDelete
  14. ஐயா விஜயன் - யாருக்கும் முத்திரை குத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முரண்பாடுகளை சுட்டிக்காட்டி முகமுடிகளை அம்பலப் படுத்துகிறோம். அவ்வளவுதான்

    ReplyDelete
  15. திரு பந்து - முரண்பாடுகள் என்னுடையதில்லை. அதை சரியாக திரு வேகநரி சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி

    ReplyDelete
  16. திரு அனானி - பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்ற மாயையில் மயங்கியவரில் நீங்களும் ஒருவரோ?

    ReplyDelete
  17. மாசியண்ணா, எனது எல்லா பதிவுகளையும் படித்து விட்டு பின்னூட்டம் எழுதுங்கள். எங்கள் சங்கக் கூட்டங்களில் அவசியம் சொல்கிற விஷயம் என்ன தெரியுமா? - கடந்த வருடம் நம் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ள இளம் தோழர்களுக்கு உள்ள அரசியல், சமூக, பொருளாதார அறிவு கூட கிடையாத தற்குறி ராகுல் காந்தியையும் ரத்தத்தை பருகும் மத வெறியன் மோடியையும் முதலாளிகள் முன்னிறுத்துகின்றார்கள்

    ReplyDelete
  18. காங்கிரஸ் நாசகாரக் கூட்டணியை எதிர்க்கவேண்டிய தேவை இப்போது தமிழர்கள் முன்னால் இருக்கிறது, இதற்காக வியூகம் வகுக்கிறார் தமிழருவி மணியன், இது புரியவேண்டியவர்களுக்கு புரியும். இந்த இடத்தில் மதவாதம் மதவாதம் என்று சிலர் கூச்சல் போடுவதற்கு காரணமே திரும்பவும் காங்கிரஸ் திமுக கூட்டணியை ஆட்சிக் கொண்டுவரவேண்டூம் என்ற நோக்கம்தான். இதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறர்கள்.

    ReplyDelete
  19. தரகு வேலை செய்வதற்கு வியூகம் அமைப்பது என்ற பெயரா? சபாஷ். காங்கிரஸ், பாஜக இருவருமே வீழ்த்தப்பட வேண்டியவர்கள். இந்த இருவரும் இல்லாத மாற்று அணியை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. அது இல்லாமல் மோடி வந்தால் பரவாயில்லை என்று சொல்லும் தமிழருவி மணியன் எட்டப்பனாகவே காட்சியளிக்கிறார்

    ReplyDelete
  20. மோடியை எதிர்ப்பவர்களை காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று சொல்வது வடி கட்டிய முட்டாள்தனம். மோடியின் ரத்த சரித்திரம், மோசடி வேலைகளுக்கு பதில் சொல்ல முடியாத கையாலாகதவர்களின் கற்பனைவாதம் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் திருவாளர் முத்து கிருஷ்ணன் அவர்களே

    ReplyDelete
  21. திரு முத்து கிருஷ்ணன் அவர்களே, நான் வைகோ பக்கம் இன்னும் வரவேயில்லையே, அதற்குள் என்ன அவசரம்? வரும் முன் காப்போம் என்ற கொள்கையோ?

    ReplyDelete
  22. முரண்பாடு பற்றிய உண்மையை சுட்டிக்காட்டிய வேக நரிக்கும் உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  23. ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில் கஞ்சி குடித்து வயிறு வளர்த்து வந்த சமர்த்தான அக்கிரகாரத்து பூனை இப்போது இன்னும் ஒரு படி தாவி காவிப் பயங்கரவாதிகளின் காலை நக்கவும் தயாராகி விட்டது.:vinavu
    அருவி என்று பெயர் இருக்கும் போதே மேலே இருந்து கீழே விழும் என்பது தெரியும் ,அது இப்படி சாக்கடையில் கலக்கும என்றா எதிர்பார்த்தோம்

    ReplyDelete
  24. இன்றைய தேதி வரை சொந்த கட்ச்சிகாரனையே போட்டு தள்ளும் அழித்தொழித்தல் செய்யும் இடதுசாரிகள்,80 களில் மக்கள் சீனத்தில் டினமேன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை கொன்ற இடதுசாரிகள்,லெனினுக்கு பிறகு லட்சகணக்கான அறிஞர்களையும்,எழுத்தாளர்களையும் சைபீரிய சிறைகளில் அடைத்து கொடுமைபடுத்திய ஸ்டாலினை தொழும் இடதுசாரிகள் தமிழருவியின் தரத்தைப்பற்றி பேசுவது மஹா கேவலம்.

    ReplyDelete
  25. தமிழருவி மணியன் தரமிழந்து போகிறாராம்...! # ஏம்பா...தரமோடு அவர் இருந்தப்போ கவர்னர் உத்தியோகமா கொடுத்து அழகு பார்த்தீங்க?

    ReplyDelete
  26. ஏம்பா ராமா மதசார்பற்ற கூட்டனி னீன்க செய்தால் அது ப்ரொகெர் வேலை இல்லை மத்தவன் செய்தால் அது ப்ரொகெர் வேலை.

    கம்முனிஸம் பலிஸி 1001...ரமானுக்கு ஒரு ஒ பொடுன்கொ

    ReplyDelete
  27. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திசை திருப்புவது மலிவான உத்தி திரு விஜயன். இதற்கு என்னால் பதிலளிக்க முடியும்.
    ஆனால் தூங்குவது போல நடிக்கும் உங்களை எனது பதில் எழுப்பாது என்பதால் பதில் சொல்லப் போவதில்லை

    ReplyDelete
  28. ஐயா கடைசியா வந்த அனானி, மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்கத் தெரியலியே. நீ இப்படியும் எழுதுவ, நல்லவன் மாதிரியும் நடிச்சுக்கிட்டு இருப்ப, உன்னையும் உங்க ஊர்ல சில ஆசாமிங்க நம்பறாங்களே, அவங்கள சொல்லனும்

    ReplyDelete
  29. நடு நிலைமை நியாயமில்லை

    இந்தப் பக்கம்,
    அந்தப் பக்கம்
    எங்கும் செல்லாமல்
    நடுவில் நின்றால்
    சாலையிலும் ஆபத்து
    வாழ்க்கையிலும் ஆபத்து

    நாணயத்திற்கும்
    இரண்டு பக்கம்,
    பூ உண்டு,
    தலை உண்டு,
    நடுப்பக்கம்
    எங்கே உண்டு?

    உண்மை உண்டு,
    பொய் உண்டு,
    இரண்டிற்கும் நடுவினிலே
    வேறு என்ன உண்டு.?

    நியாயத்தின் பக்கமா?
    அநியாயத்தின் பக்கமா?
    இங்கே எங்கு வரும்
    நடுவில் ஒரு பக்கம்?

    மதில் மேல்
    நிற்கும் பூனை கூட
    ஏதாவது ஒரு பக்கம்
    குதித்தே தீரும்.

    நல்லவராய்
    முகம் காட்ட
    நடுநிலைமை
    என்று சொன்னால்
    கோழைதான் என்று நம்மை
    கண்ணாடி காண்பிக்கும்.

    சரியான பக்கம் நின்றால்
    சரித்திரத்தில் புகழ் உண்டு,
    தவறான பக்கத்திற்கு
    மோசமான (இடதிற்கும்) கூட
    கண்டிப்பாய் கிடைத்து விடும்.
    நடுநிலைமை நாடகம்தான்
    நடுத்தெருவில் நிற்க வைத்து
    விபத்தை உண்டாக்கும்
    நமக்கும்,
    நாளை தேசத்திற்கும் கூட.
    Posted by S.Raman,Vellore

    ReplyDelete