Sunday, September 8, 2013

பாலிஸி எடுத்தா புண்ணியம் கிடைக்கும்

இன்சூரன்ஸ் வார விழா நேற்று நிறைவடைந்தது.

வேலூரில் நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு சங்கர் அவர்களின் உரை மிகவும்
பிடித்திருந்தது.


அவர் பேச்சில் இருந்து சில பகுதிகள்

" இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதன் மூலம் உங்களை அறியாமல்
புண்ணியம் செய்கிறீர்கள். இறந்து போனவரின் குடும்பத்திற்கு
எல்.ஐ.சி அளிக்கும் பணத்தில் நீங்கள் செலுத்தும் பிரிமியத்தின்
ஒரு பகுதியும் உள்ளது. ஒரு குடும்பத்தை தொடர்ந்து வாழ
வைக்கும் புண்ணியம் வேண்டுமானால் எல்.ஐ.சி யில் பாலிசி
எடுங்கள்.

சாதாரண மனிதர்கள் எல்.ஐ.சி யிலும் அரசு வங்கிகளிலும்
முதலீடு செய்கிறார்கள். மெத்தப் படித்த மேதாவிகளும்
அதிபுத்திசாலிகளும்தான் தனியார் நிறுவனங்களில் 
முதலீடு செய்து ஏமாந்து போகிறார்கள்.

நாற்பது சதவிகித வட்டி எப்படி வரும் என்று யோசிப்பதில்லை.
நாற்பது சதவிகிதம் வட்டியை கொடுத்து விட்டு அறுபது 
சதவிகிதம் முதலை அடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.

எல்.ஐ.சி மற்றும் அரசு வங்கிகள் பாரம்பரிய உணவுகள் போல.
உங்கள் வயிற்றுக்கு எந்த கெடுதலும் செய்யாமல் உங்களை
பாதுகாக்கும்.

தனியார் நிறுவனங்கள் வயிற்றுக்குக் கேடு
விளைவிக்கும்  பாஸ்ட் புட் போல,  வீட்டிற்கும் கேடு,
நாட்டிற்கும் கேடு. "

என்ன எல்.ஐ.சி யில் பாலிசி எடுத்து புண்ணியத்தை
சேர்க்க புறப்பட்டு விட்டீர்களா?

1 comment: