எலி மீது அமர்ந்தவனை
ஏற்றிக் கொண்டு
சாலைகளில் விரைகிறது
குட்டி யானைகள்.
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்புமாய்
சிக்கனமாய் கேட்டு
மோதகம் ஏந்திய
கைகளிலே
வேலும் வில்லும்
வாளும் சூலமும்.
ஆற்றங்கரைகளிலும்
முச்சந்திகளிலும்
கேட்பாரற்றுக் கிடக்கும்
சிலைகளின் மௌன ஓலம்
காவிக்கொடிகள்
பலவந்தமாய் நடத்தும்
விழாக்களின் இரைச்சலில்
அமுங்கியே கிடக்கிறது.
பக்தியை பயமாய்
மாற்றி விட்ட
வீரத்துறவிகள்(!)
கடலில் கரையாமல்
அடம் பிடிக்கும்
ஆண்டவர்களை
அடித்து அமுக்க
தடிகளோடு தயாராய்.
நாளை
வினாயகர் சதுர்த்தி
ஏற்றிக் கொண்டு
சாலைகளில் விரைகிறது
குட்டி யானைகள்.
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்புமாய்
சிக்கனமாய் கேட்டு
மோதகம் ஏந்திய
கைகளிலே
வேலும் வில்லும்
வாளும் சூலமும்.
ஆற்றங்கரைகளிலும்
முச்சந்திகளிலும்
கேட்பாரற்றுக் கிடக்கும்
சிலைகளின் மௌன ஓலம்
காவிக்கொடிகள்
பலவந்தமாய் நடத்தும்
விழாக்களின் இரைச்சலில்
அமுங்கியே கிடக்கிறது.
பக்தியை பயமாய்
மாற்றி விட்ட
வீரத்துறவிகள்(!)
கடலில் கரையாமல்
அடம் பிடிக்கும்
ஆண்டவர்களை
அடித்து அமுக்க
தடிகளோடு தயாராய்.
நாளை
வினாயகர் சதுர்த்தி
வணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-