இப்போதுதான் வீடு திரும்பினேன். ஆனாலும் உடனடியாக
பதிவிட வேண்டும் என்ற ஆவலில் அவசரமான இந்த பதிவு.
ராணிப்பேட்டையில் ஒரு திருமண வரவேற்பு. பந்தியில்
அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகில்
அமர்ந்திருந்த தோழர் குபேந்திரன் " தோழர், அப்படியே
மெதுவாக எதிர் வ்ரிசையில் அமர்ந்துள்ள பெண்ணை
பாருங்களேன் என்றார்.
பார்த்தேன், அப்படியே அசந்து போனேன்.
இரு கைகளும் இல்லாத அந்தப் பெண் வலது கால்
விரல்களுக்கு இடையில் ஸ்பூனை வைத்து அவ்வளவு
அழகாகவும் வேகமாகவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
சாதத்தில் ரசத்தைக் ஸ்பூனில் கலந்து பிசைந்து
சாப்பிட்டது கூட அவ்வளவு இயல்பாக இருந்தது.
அது மட்டுமல்ல, பக்கத்தில் உள்ளவர்களோடு மிகவும்
மகிழ்ச்சியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
எல்லாம் நன்றாக இருந்தும் சோம்பித் திரியும் மனிதர்கள்
மத்தியில் தனக்குள்ள குறைபாட்டை பொருட்படுத்தாமல்
எல்லோரையும் போல சகஜமாக நடந்து கொண்ட
அந்தப் பெண்ணை பாராடுகிறேன். தலை வணங்குகிறேன்.
மனிதர்கள் மீது யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்
என்று அந்தப் பெண் சொல்லாமல் சொன்னாள்.

நல்லதொரு தகவலைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
ReplyDeleteஊனத்தை காட்டி பிச்சை எடுப்பவர்களின் மத்தியில் இந்த பெண் உண்மையில் போற்றுதலுக்குரியவரே. வெல்லட்டும் அவரின் எண்ணங்களும் செயல்களும். நல்ல பதிவு. புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .
ReplyDeleteவாழ வேண்டும், வாழ பழகி கொண்டாள்
ReplyDeleteநானும் அசந்து போனேன்.
ReplyDelete