நிலம்
அதிர்ந்தது
கட்டிடங்கள்
தகர்ந்தது,
இடிபாடுகளுக்கு
இடையே
மரண ஓலங்கள்,
மாண்டவர்
சடலங்கள்.
அழுகுரல்
கேட்ட
அந்த பூமியிலே
ஓர் அதிசய
நிகழ்வு.
கடலில்
இருந்து
உதித்தது
ஒரு புதிய
தீவு.
இழப்பிற்கு
நடுவில்
ஓர் இன்ப அதிர்ச்சி.
பேரழிவின்
மத்தியிலே
பெரும்
அற்புதம்.
நிலத்தை
அதிரச் செய்த
நில நடுக்கம்
கடலுக்கடியில்
அமுங்கிக்
கிடந்த
பூமியை
புதையலாய்
மேலே
தள்ளியது.
துயரத்தின்
பிடியில்
துவண்டு
விடாதே,
மகிழ்ச்சியில்
களிப்பில்
மயங்கி விடாதே
இது
இயற்கை அன்னை
சொல்லாமல்
சொல்லித்தந்த
வாழ்க்கைப்
பாடம் .
இயற்கையின் அற்புத விளையாட்டை கவிதையில் விளக்கியிருப்பது அருமையிலும் அருமை .
ReplyDeleteபாகிஸ்தான் அழிவிற்கிடையே ஓர் தீவு உண்டான செய்தி சொன்னதை விட நீங்க எங்களுக்கு அதை வைத்து எடுத்த எடுத்த பாடம் தான் பயனுள்ளது.
ReplyDeleteதுயரத்தின் பிடியில்
துவண்டு விடாதே
மகிழ்ச்சியில் களிப்பில்
மயங்கி விடாதே
இது
இயற்கை அன்னை
சொல்லாமல் சொல்லித்தந்த
வாழ்க்கைப் பாடம்
மற்றதெல்லாம் அந்த தீவில் மனிதன் வசிக்கலாமா? வசித்தால் கூட வாழ வசதியிருக்கா? அந்த தீவை மீட்போம் என்கிற அரசியல்வாதிகளுக்கு மட்டும் நன்மை கொடுக்கும் தீவா?