Friday, September 6, 2013

ஆண்கள் நன்றாக சமைப்பார்கள், கோலம் போடுவார்கள், நிஜம்தாங்க!




01.09.1956 அன்று எல்.ஐ.சி உதயமானதை முன்னிட்டு 57 வது இன்சூரன்ஸ் வார விழா இந்தியா முழுதும் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது. இது எங்கள் நிறுவனம் என்ற உரிமையோடு, உணர்வோடு அனைத்து பிரிவு ஊழியர்களும் கலந்து கொள்ளும் பாங்கு எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எங்களால் மட்டுமே பெருமையோடு சொல்ல முடியும்.

எங்கள் வேலூர் கோட்ட அலுவலகத்திலும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.  ஊழியர்கள், முகவர்கள், மாணவர்கள் என பல பிரிவினருக்கும் பல போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டு போட்டிகளை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒன்று ரங்கோலிப் போட்டி
இன்னொன்று சமையல் போட்டி.

ரங்கோலிப் போட்டியில் இந்த முறை பங்கேற்ற அணிகள் குறைவு. நான்கு அணிகளில் எட்டு பேர். இதில் மூவர் ஆண்கள்.

முதல் பரிசு பெற்ற அணியில் ஒரு ஆண் இருந்தார். அந்த கோலம் இது.



இரண்டாவது பரிசு பெற்ற அணியில் இருவருமே ஆண்கள். அந்தக் கோலம் இங்கே.


மூன்றாவது பரிசு பெற்ற அணியில் இருவரும் பெண்கள்.



கோலங்களின் அழகு ஒரு புறம் என்றால், சொல்லப்பட்ட செய்தியையும் பாருங்கள். உடமை உணர்வோடு ஊழியர்கள் உள்ளார்கள் என்பது புரிகிறதல்லவா!

அடுத்தது சமையல் போட்டி

நெருப்பில்லா சமையல் என்பது தலைப்பு.

இந்தப் போட்டியில் பத்து அணிகள்.

இருபது பேரில் பத்து ஆண்கள், பத்து பெண்கள்.

ஆண்கள் மட்டும் தனியாக மூன்று அணிகளில்.
இன்னொரு நான்கு அணிகள் ஆண்களையும் கொண்டிருந்தது.
பெண்கள் மட்டும் தனியாக மூன்று அணிகளில்.

விதவிதமான உணவு வகைகளை இங்கே பாருங்கள்.












பெண்களுக்கு மட்டுமே என்று பொதுவாக நடத்தப்படும் ரங்கோலிப் போட்டியிலும் சமையல் போட்டியிலும் ஆண்கள் பங்கேற்பது ஆரோக்கியமான விஷயம்தானே!

என்ன சொல்கிறீர்கள்?

முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே.

நானும் எங்கள் கோட்டத்தலைவர் தோழர் தசரதனும் ஒரு அணியாக பங்கேற்றோம். பரிசு கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் நாங்கள் தயாரித்த அவல் பொங்கலையும் விஜிடபிள் பிரெட் டிலைட்டையும் ருசி பார்த்த ஊழியர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் நன்றாக இருந்தது என்று பாராட்டினார்கள். அதுவே பரிசு கிடைத்தது போலத்தான்.

அவல் பொங்கல் மற்றும் விஜிடபிள் பிரெட் டிலைட் க்கான சமையல் குறிப்பை நீங்கள் நிச்சயம் கேட்பீர்கள் என்று தெரியும்.

தனிப் பதிவாக விரைவில் எதிர்பாருங்கள்.

4 comments:

  1. Thambi, Chennai bloggers meet sandai partri, ungal karuthu?!?!?

    ReplyDelete
  2. அனானி, உனக்கு 48 வயசுனா என்னை தம்பினு கூப்பிடு. இல்லையா அண்ணா என்று மரியாதையாக சொல்லு. சென்னை ப்ளாக்கர் கூட்டம் பற்றி எனக்கு தெரியாது, அதிலே கலந்து கொள்ளவில்லை என்று சொன்ன பிறகு அங்கே நடந்த சண்டை பற்றி கருத்து கேட்பது அபத்தமாக இல்லையா? ஒரு பதிவராக இருந்து கொண்டு அனாமதேயமாக பின்னூட்டம் போடும் உங்களைப் போன்ற ஆட்கள்தான் சண்டைக்கு காரணமாக இருந்திருப்பீர்கள். வலைப்பக்கங்களின் தரத்தை குறைப்பதும் அனாமதேயங்களும் போலி அடையாளங்களோடு உலா வரும் மோசடிப் பேர்வழிகளும்தான்.

    ReplyDelete
  3. சமையலில் தேர்ந்தவர்கள் ஆண்கள்தானே ?அதனால்தானே நளபாக சமையல் என்கிறார்கள் !

    ReplyDelete
  4. "விடாது கருப்பு" சமையல் மற்றும் ananymous இரண்டுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    ReplyDelete