Monday, September 2, 2013

பார்க்க, கேட்க சிவாஜி கணேசன், கேட்க மட்டுமே எம்.ஜி.ஆர்






இன்று நான் சினிமா பற்றி மட்டுமே எழுதப் போகிறேன்.

கடந்த சில நாட்களாக இரவு பத்து மணிக்கு மேல் முரசு டி.வியில் காலத்தால் அழியாத பல நல்ல பாடல்களை பார்த்து வருகிறேன். சுகமான அனுபவமாக அது உள்ளது.

அதிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாடல்களை பார்ப்பதும் கேட்பதம் எவ்வளவு இனிமையாக உள்ளது! காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி அவர் காண்பிக்கிற முக பாவத்திற்கு ஈடு இணையாக இன்னொருவர் இன்னும் தோன்றவே இல்லை.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலந்தானா பாடலை எல்லோரும் சிலாகிப்பார்கள். நானும் கூட. அதிலே குறிப்பாக ஒரு இடம். “ புண் பட்ட சேதியைக் கேட்டவுடன், இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார் ? “ என்று பத்மினி ஆடிக்கொண்டே பாட, இவர் நாகஸ்வரத்திலும் கண்களாலும் “ நானறிவேன் “ என்று பதில் சொல்வார். உடனே பாலையா நெகிழ்ந்து போய் சிவாஜியை தட்டிக் கொடுப்பார்.

இதை விட இன்னொரு இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனும் ஏ.வி.எம்.ராஜனும் தியாகராஜரின் நகுமோ கீர்த்தனையை வாசித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது பத்மினி மாட்டு வண்டியில் வந்து இறங்குவார். உடனே சிவாஜி நாகஸ்வரம் வாசித்துக் கொண்டே பாலையாவிடம் கண் ஜாடை காண்பித்து வாசலைப் பார்க்கச் சொல்வார். அவரும் பார்த்து விட்டு சூப்பர் என்பது போல கண்களிலேயே பதில் சொல்வார். அதற்குப் பிறகு சிவாஜியின் வாசிப்பிலும் ஒரு துள்ளல் தெரியும். கண்டதும் காதல் போலும். 

அந்தக் காட்சியின் இணைப்பை இங்கே  அளித்துள்ளேன்.
நீங்களும் பார்த்து ரசியுங்கள். 

சான்ஸே இல்லை, சிவாஜி இஸ் கிரேட்..

இரண்டு தினங்கள் முன்பாக சென்னை சென்று காரில் திரும்பும்போது சிவாஜியின் பாடல்கள்தான் கேட்டுக் கொண்டு வந்தேன். பாடல்களை கேட்கும்போது கண் முன்னே சிவாஜிதான் தெரிந்தார்.

அதே சமயம் இன்னொரு அருமையான பாடலான கொஞ்சும் சலங்கை சிங்கார வேலனே தேவா வில் சிவாஜி கணேசன் போன்ற சிறந்த நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசனின் நடிப்பு இல்லை என்பதையும் அப்பாடலில் சாவித்ரியிடம் இருந்த இயல்பும் கூட  ஜெமினியிடம் இல்லை என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

எந்த வில்லங்கமும் இல்லாமல் இந்த பதிவை முடிக்க மனம் வரவில்லை.

சிவாஜியின் பாடல் பார்க்கவும் கேட்கவும் இனிமை.

ஆனால் எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்க மட்டும்தான் இனிமை.

ரொமான்ஸ் பாடல்களில் எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்த்தால் காமெடி காட்சி போல சிரிப்பு வந்து விடுகிறது. பாஸ் என்கிற பாஸ்கரனில் சந்தானம் எவ்வளவோ சொல்லிக் கொடுத்தும் ரொமான்ஸ் முகபாவம் வராத ஆர்யா போலத்தான் எல்லா பாடல்களில் எம்.ஜி.ஆர் தெரிகிறார்.

அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்ட ரிகஷாக்காரன் படத்தை ஒரு முறை பார்க்கும் துர்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அதை காமெடி படமாக நினைத்து சிரித்து மகிழ்ந்தேன் என்பது வேறு விஷயம்.

14 comments:

  1. ரமன் அவர்களே1 உலகம் பூராவிலும் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளிகளில் ஸ்டனிஸ்லாவ்ஸ்கி அவர்களின் theory of acting தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் ! theory படி ஏம்.ஜி ஆர் அவர்களின் நடிப்பை நான் ரசிப்பேன் ! சிவாஜி over ! என்னால் ரசிக்க முடியவில்லை ! Taste differs ! என்ன செய்ய !!! ---காஸ்யபன் !

    ReplyDelete
  2. Nanba why you did not come Chennai bloggers meet?

    ReplyDelete
  3. ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தியரி ஆப் ஆக்டிங் புத்தகத்தில் சிவாஜி கணேசன் நடித்த புகைப்படங்களுடன் அவரது நடிப்பு திறமை விளக்கபட்டிருக்கிறது என்பதை திரு.காஷ்யபன் அறிவாரா.சிவாஜியின் நடிப்பு method acting என்ற நடிப்பு வகையில் வருகிறது.இந்த வகை நடிப்பின் பிதாமகன் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்கள்.

    ReplyDelete
  4. திரு அனானி, நீங்கள் பதிவர் என்றால் உண்மையான அடையாளத்தோடு வரலாமே?

    நிற்க,

    நான் வேலூர் ப்ளாக்கர்

    அதனால் சென்னை ப்ளாக்கர் கூட்டம் பற்றி
    தெரியாது.

    ReplyDelete
  5. ஆஹா, நாரதர் கலகமாக நான் துவங்கியது
    நன்மையில் முடியும் போல இருக்கிறதே!

    காஷ்யபன் தோழர், ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.
    உங்கள் பதில் தொடரட்டும்

    ReplyDelete
  6. சிவாஜியை மிஞ்ச நடிகன் இல்லை. பாசமலர் பார்த்து அழாதவரின் மனதில் ஈரம் இல்லை.ஓவர் அக்டிங் என்றால் என்னவென்று யாரும் விளக்கவில்லை.வீரபாண்டிய கட்ட பொம்மன் ஓவர் அக்டிங் என்றால் ஓவர் அக்டிங் இல்லாது நடித்துக்காண்பியுங்கள்

    ReplyDelete
  7. //அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்ட ரிகஷாக்காரன் //

    இத் தேசிய விருது ஒரு விபத்து என்பதைப் பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார். நம்பும் படியாகத் தான் இருந்தது.எம்ஜிஆர் கூட அதிசயப்பட்டிருப்பார்.
    ஆனால் எம்ஜிஆர் வாழும் வரை எந்த விமர்சனமும் வரவில்லை.

    ReplyDelete
  8. Sivaji is incomparable.But one thing he did not know how to act in real life.His failure in politics devolved on this.

    ReplyDelete
  9. விஜயன் அவர்களே ! ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஒரு நாடக நடிகர் ! அவருடைய புத்தகத்தில் சிவாஜி பற்றி எழுதியிருப்பது எனக்கு ஒரு செய்தியக இப்பொழுது தான் தெரிகிறது ! தேசீய நாடகபயீற்சிபள்ளியின் நாடக பட்டறையில் ஸ்டானிஸ்லாஸ்கி பற்றி அறிந்து கொண்டேன் ! Real Theatre,symBolic theatre, என்று நடகம் பற்றியும், நடிப்பு பற்றியும் பரிசோதனை செய்தவர் அவர் ! செகோவின் மறவாப் புகழ் கொண்ட நாடங்களை நடத்தியவர் ! Moscow Art Theatre ஐ உருவாக்கியவர் ! நடிப்பு பயிற்சி பள்ளியில் பாடத்திட்டத்தை up date பண்ணும் பொது method acting ,sivaJi என்று சேர்த்திருக்கலாம்
    கலை இலக்கியம் என்பது நூணுக்கிப்பார்த்தால் இறுதியில தனிமனித ரசனைக்கு உட்பட்டது தான் 1நண்பரே ! நிறைய விவாதிப்போம் ! தெளிவு பெருவோம் ! திரைத்துரையில் புதிய வரவு , புதிய சிந்தனை தெளிவு வேண்டும் ! சிவாஜி,ஜெமினி,எம்.ஜி.ஆர் ,என்று பழய பெருங்காய செப்புக்குள் வரும் தலை முறைய அடைத்து விடலாகாது ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன் !
    (பி.கு. யொகன் அவர்களே ! காமிரா கவிஞர் பாலு மகெந்திரா பற்றியும் எனக்கு விமரிசனம் உண்டு ! )

    ReplyDelete
  10. காஷ்யபன் அவர்களுக்கு ,தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.சூரியனின் கீழ் உள்ள அனைத்தும் விமர்சனத்திற்கு உட்பட்டதே.எதுவும் கேள்விக்கு உட்பட்டதே அதை நாகரீகமாக செய்வோம்.

    ReplyDelete
  11. Though there is a criticism about Sivaji that it is over acting, He had underplayed in many films. Recently Cho in an article in Kumudham what justification Sivaji had for his overacting in few films.

    But Sivaji acting with sripriya, sridevi & ambiga as pairs in later years could not be digested.

    National Award to M.G.R is not accident. It is an advance payment to split D.M.K

    ReplyDelete
  12. "அங்கு கொஞ்சி விளையாடும் என் குல மங்கையருக்கு மஞ்சளரைத்து கொடுத்தாயா " "மாமனா மச்சானா" என்ற உச்சரிப்பில் வாழ்ந்து காட்டியவர் அவர். வீர பாண்டிய கட்டபொம்மன் இப்படித்தான் இருந்து இருப்பான் என்று நமக்கு உருவகப்படுதியவர் அவர். நடிப்பின் உச்சமல்லவா அவர்?

    ReplyDelete

  13. ஸ்டானிஸ்லோவ்ஸ்கி இருபதாம் நூற்றாண்டில் சோவித் ரஷ்யாவில் ஒரு நாடக நடிகர்.இவர் நடிப்பிர்க்கான இலக்கண முறை வகுத்தார்.இவர் ஆற்றிய உரை மற்றும் அவர் எழுதிய கட்டுரை தொகுப்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு A HAND BOOK OF STANISLAVSKI METHOD ENDRU 1947 வெளியிடப்பட்டது. ஆனால் அதற்க்கு மிகவும் முந்தைய காலத்திற்கு முன் நமது தொல்காபியர் நடிப்பிலக்க்கணம் மற்றும் நாடக இலக்கணம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார் நகையே அழுகை இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகைஎன்று அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பா

    இந்த எட்டு சுவையையும் நான்கு நான்காக வகைபடுத்தி 32 சுவையாக வடித்துள்ளார்.

    முதலில் nagai என்னும் நகைசுவையை நான்கு வகைப்படும் அவை எள்ளல் இளமை பேதமை மடன் . இம்மாதிரி ஒவ்வொன்றிக்கும் நான்கு சுவை .அவைகளை விரிவாக நடிகர்திலகத்தின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்க இந்த ஒரு பதிவு போதாது. தேவைபட்டால் காட்சி அமைப்பு வசணங்களுடன் அடுத்த பதிவில் பதிகிறேன். நானும் உலக சினிமாக்களை ஏராளமாக பார்த்திருக்கிறேன். அதனால் என்னால் உறுதியாக கூறமுடியும் உலகில் ஒப்பற்ற நடிகன் நடிகர் திலகமே என்று. யானையை பார்த்த குருடனைப்போல் சில மேதாவிகள் சிவாஜியை புறக்கணிப்பது அவர் தமிழ்நாட்டில் துரதிர்ஷ்டவசமாக பிறந்ததுதான். இந்த கருத்தை வெளியிட்டால் சந்தோசம் இல்லையென்றால் வருத்தம் இல்லை.

    ReplyDelete

  14. ஸ்டானிஸ்லோவ்ஸ்கி இருபதாம் நூற்றாண்டில் சோவித் ரஷ்யாவில் ஒரு நாடக நடிகர்.இவர் நடிப்பிர்க்கான இலக்கண முறை வகுத்தார்.இவர் ஆற்றிய உரை மற்றும் அவர் எழுதிய கட்டுரை தொகுப்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு A HAND BOOK OF STANISLAVSKI METHOD ENDRU 1947 வெளியிடப்பட்டது. ஆனால் அதற்க்கு மிகவும் முந்தைய காலத்திற்கு முன் நமது தொல்காபியர் நடிப்பிலக்க்கணம் மற்றும் நாடக இலக்கணம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார் நகையே அழுகை இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகைஎன்று அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பா

    இந்த எட்டு சுவையையும் நான்கு நான்காக வகைபடுத்தி 32 சுவையாக வடித்துள்ளார்.

    முதலில் nagai என்னும் நகைசுவையை நான்கு வகைப்படும் அவை எள்ளல் இளமை பேதமை மடன் . இம்மாதிரி ஒவ்வொன்றிக்கும் நான்கு சுவை .அவைகளை விரிவாக நடிகர்திலகத்தின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்க இந்த ஒரு பதிவு போதாது. தேவைபட்டால் காட்சி அமைப்பு வசணங்களுடன் அடுத்த பதிவில் பதிகிறேன். நானும் உலக சினிமாக்களை ஏராளமாக பார்த்திருக்கிறேன். அதனால் என்னால் உறுதியாக கூறமுடியும் உலகில் ஒப்பற்ற நடிகன் நடிகர் திலகமே என்று. யானையை பார்த்த குருடனைப்போல் சில மேதாவிகள் சிவாஜியை புறக்கணிப்பது அவர் தமிழ்நாட்டில் துரதிர்ஷ்டவசமாக பிறந்ததுதான். இந்த கருத்தை வெளியிட்டால் சந்தோசம் இல்லையென்றால் வருத்தம் இல்லை.

    ReplyDelete