தலித் இனத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவரை ஒரு வெறி பிடித்த கூட்டம் ஆடைகளை களைய வைத்து தாக்கிக்கொண்டே ஊர்வலமாகச் செல்கிற காட்சி மனதை கடுமையாக பாதித்தது.
உத்திரப்பிரதேசத்தில் இக்கொடுமை நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது. நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்த நிலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது ராஜஸ்தானில்தான், போன வருடம் நடந்தது என்று சொல்லி பிரச்சினை திசை திருப்பப்படுகிறது.
சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது வெறுப்பை விதைத்து அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மனிதத்தன்மையற்ற ஒரு வெறி பிடித்த கூட்டத்தை உருவாக்கியுள்ளதுதானே பாஜக இத்தனை நாள் நடத்தியுள்ள அரசியலின் விளைவு!
இந்த கேவலம் ராஜஸ்தானில் நடந்தால் என்ன? உ.பி யில் நடந்தால் என்ன?
இதற்கெல்லாம் அடிப்படை சங் பரிவாரக்கும்பலின் வெறுப்பு அரசியல் தவிர வேறு என்ன?
யோகி எனும் தீய சக்தி முதல்வரான பின்பு அதிகரித்து வரும் அராஜக நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட முடியுமா என்ன? இதை விட கேவலமாகக்கூட அவரது ரோமியோ படை செயல்படும். ராஜஸ்தானில் நடந்தது என்பதால் உ.பி ஒன்றும் அமைதிப்பூங்கா என்று அர்த்தமில்லை.
இத்தனை அராஜகங்களுக்கும் கிரியா ஊக்கி ஒரு நபர்.
அந்த நபர் இந்தியாவை காட்டுமிராண்டிக்காலத்திற்கு எடுத்துச் செல்வது என்ற இலட்சியத்தோடுதான் ஆட்சி செய்கிறார்.
hi idiot, You broke india and gifted to your chinese father and pakisthan mother
ReplyDeleteYou are a true Sanghi Stupid
Delete