உடலில்
கொழுப்பு இருக்கலாம். கொழுப்பிலே உடல் இருந்தால், அதுதான் ஆசான் என்று அழைக்கப்படும் ஜெமோ/
“இடங்கை
இலக்கியம்” என்று அவர் சிண்டு முடிய நடத்திய முயற்சியில் அடி வாங்கியதால் வழக்கம்
போல மீண்டும் தூற்றியுள்ளார். அதிலே அவரது சுய தம்பட்டம் தவிர வேறெதுவும்
வெளிப்படவில்லை. அவரது அற்புத வசைகளை பார்ப்போம். அதற்கான பதிலையும் கீழே
கொடுத்துள்ளேன்.
இடதுசாரிகளிலேயே பலர் என்னில் கால்வாசிகூட வாசித்திருக்க மாட்டார்கள். நான் இதே வேலையாக கால்நூற்றாண்டை கடந்திருக்கிறேன். [அதோடு பெரும்பாலானவர்கள் எனக்கு நூலை அனுப்பியும் விடுகிறார்கள்]
உங்களுக்கு
வாசிப்பது மட்டும்தான் வேலை. இடதுசாரிகளுக்கு வேலை பெரும்பாலும் போராட்ட
களத்தில்தான். மக்களிடம்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். உங்களின் வாசிப்பு
அனுபவத்தை விட அவர்களின் கள அனுபவம் இன்னும் மேன்மையானது. பாவம் அந்த
பெரும்பாலானவர்கள். உங்களுக்கு புத்தகத்தையும் அனுப்பி பிறகு உங்களிடம் வசையும்
வாங்கி விடுகிறார்கள்.
இடங்கை இலக்கியம் என்றெல்லாம் பெயர் மாற்றப்படவில்லை. கட்டுரைகளுக்குத் தலைப்பு வைக்கும்போது கவனத்தை ஈர்க்கும்படி, நினைவில்நிற்கும்படி தலைப்புவைப்பது இலக்கியவழக்கம்.
அது வித்தியாசமாக ஒலிப்பதனாலும், வரலாற்றுக்குறிப்பு ஒன்று இருப்பதனாலும் கொஞ்சம் இலக்கியரசனையும் வாசிப்பும் உள்ள எவருக்கும் அத்தலைப்பு. சுவாரசியமான ஒரு சொல்லாட்சியாகவே தோன்றியது. இந்த எளிய விஷயத்தைக்கூட உணராதவர்கள் என்னதான் இலக்கியம் வாசிக்கிறார்கள்?
சமாளிக்காதீங்க
ஆசானே. நீங்க யாரு, எப்பேற்பட்ட அப்பாடக்கர், சொல்வதிலும் சொல்லாமல் விடுவதிலும்
நீங்கள் செய்யும் வன்ம அரசியலை நாங்கள் நன்றாகவே உணர்வோம். ஏதோ என்னைப் போல
வலைப்பக்கங்களில் எழுதுபவ்ர்கள் வேண்டுமானால் மற்றவர்களை படிக்க வைக்க சுவாரஸ்யமான
தலைப்பை வைக்கலாம். நீங்கள்தான் அகில உலக எழுத்தாள சக்ரவர்த்தியாயிற்றே. உங்களின்
வெண்முரசு நாவலையே கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று எட்டு நண்பர்களிடம் சத்தியம்
வாங்கிக் கொண்டவராயிற்றே. உங்களுக்கும் கூட இந்த தலைப்புச் சிறை அவசியமா? செய்த
தவறை ஒப்புக்கொள்ள மனமின்றி பம்முவது நன்றாகவே தெரிகிறது.
நீங்கள் வசனம் எழுதிய ஒரு படத்தின் கதை அடிப்படையில் "மாமனாரின் இன்ப வெறி" ஆனால் வேறு ஏதோ தலைப்பு வைத்தீர்களே? கதைக்கு பொருத்தமான சுவாரஸ்யமான தலைப்பை கோட்டை விட்டு விட்டீர்களே.
இவர்கள் ஏன் இப்படி தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்? வேறு எதையும் பேசுவதற்கான வாசிப்புத்தகுதி அல்லது அறிவுத்தகுதி இல்லை என்பதனாலேயே. இது ஒருவகை புறணிப் பேச்சு. இதுதான் இவர்களால் இயலும். சூழலின் துரதிருஷ்டம் இது
தலைப்பைப்
பற்றி மட்டும் பேசுவதாக சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள். இடதுசாரிகளைப் பற்றி
எழுதுவதற்கான தகுதி உங்களுக்கு இல்லை என்பதுதான் பிரச்சினை. இதிலே நீங்கள்
அடுத்தவர்களுக்கு அறிவுத்தகுதி இல்லை, வாசிப்புத் தகுதி இல்லை என்று திமிரோடு
எழுதுகிறீர்கள்.
எல்லா
தகுதியும் இருக்கிற நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? மத வெறியை
வளர்க்கிறீர்கள். கேடு கெட்டவர்களுக்கு முட்டு கொடுக்கிறீர்கள். பெண்களை இழிவு
படுத்துகிறீர்கள். உங்கள் வாசிப்புத் தகுதியை வஞ்சத்தை, நச்சு பரப்ப மட்டுமே
பயன்படுத்துகிறீர்கள்.
உழைப்பாளி
மக்களுக்காக போராடுபவர்களை வம்புக்கு இழுத்து அதிலே அற்ப சுகம் காணும் உங்கள்
அணுகுமுறையும் மாறப் போவது கிடையாது. அதனால் உங்களின் அற்ப குணத்தை
அம்பலப்படுத்தும் எங்கள் பணியும் நிற்கப் போவது கிடையாது.
நகைச்சுவை
என்ற பெயரில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள மதவெறி பற்றித்தான் என்னுடைய அடுத்த
பதிவு.
No comments:
Post a Comment