வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர அரங்கில் (Town Hall) புத்தகக் கண்காட்சி நடந்து
கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்முயற்சியில் புத்தக விழா ஏழாம்
தேதி தொடங்கியது.
சுமார் இருபது பதிப்பாளர்கள் ஸ்டால்
போட்டுள்ளனர். அறிவியல் தொடங்கி ஆன்மீகம் வரை, அரசியல் முதல் அவியல் செய்வது வரை,
புனைவுகளும் வரலாறும் பொருளாதரமுமாய் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
குழந்தைகள், மாணவர்களுக்கான நூல்களுக்கும் குறைவு கிடையாது.
ஒவ்வொரு நாள் காலையும் “மந்திரமா,
தந்திரமா” நிகழ்ச்சிகள் சத்ய சாய்பாபா, பிரேமானாந்தா தொடங்கி லோக்கல் லெவல்
சாமியார்கள் செய்யும் மோசடி வேலைகளை தோலுரிக்கிறது.
மதியம் விஞ்ஞானிகள் சந்திப்பு, கேள்வி பதில்,
மாலையில் கலை நிகழ்ச்சி, பின்பு உரை வீச்சு ஆகியவை நடைபெறுகிறது.
இதைத்தவிர நடமாடும் கோளரங்கமும் உண்டு.
விண்வெளி பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
ஆகவே வேலூர் மற்றும் அருகாமையில்
உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கண்டிப்பாக குழந்தைகளை அழைத்துக்
கொண்டு வந்து கோளரங்க அனுபவத்தை அளியுங்கள்.
இன்னும் ஐந்தே நாட்கள்தான்.
ஆம், பதினாறாம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்த முயற்சிக்கு கிடைக்கும் ஒத்துழைப்பே எதிர்காலத்தில் இன்னும் விரிவான புத்தக
விழா வேலூரில் நடைபெற உத்வேகம் அளிக்கும்.
No comments:
Post a Comment