Monday, July 10, 2017

புதிதாய் என்ன கலவரம் பொராகி?




இந்து அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என்று எச்சரித்துள்ள மத்திய அமைச்சர் பொன்னார் அவர்களே,

இன்று தமிழகத்தில் சிறுபான்மையினர், இடதுசாரிகள், தலித் மக்கள் ஆகியோர்தான் தாக்கப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நிகழ்த்துவது நீங்கள் சொன்ன இந்து அமைப்புக்கள்தான்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக, ஏ.பி.வி.பி, பஜ்ரங்தள் என்று பல பெயர்களில் செயல்பட்டாலும் அனைத்து சாக்கடைகளும் உற்பத்தியாவது நாக்பூரில் உள்ள கழிவுநீர்க் குட்டையில் இருந்துதான் என்பது அனைவரும் அறிந்ததே.

பல பெயர்களில் இந்தியா முழுதும் கலவரங்களை தோற்றுவிப்பதும் நீங்கள்தான். 
 
தமிழகத்தில் சமீபத்தில், கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் நிகழ்த்திய சில சம்பவங்களை சொல்லட்டுமா?

ராமநாதபுரத்தில் சொந்த பிரச்சினைக்காக உங்கள் தலைவர் ஒருவர் தாக்கப்பட்ட போது அதை மதக் கலவரமாக மாற்ற முயன்றீர்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினீர்கள்.

குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்க அலுவலகங்களை தாக்கி கொடிக்கம்பங்களை சேதப்படுத்தினீர்கள்.

பழனியின் மாட்டுக்குண்டர்கள் விவசாயிகளை தாக்கினார்கள்.

கோவை மாவட்டத்தில் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் மீது இரண்டு தினங்கள் முன்புதான் தாக்குதல் நடத்தியுள்ளீர்கள்.  

 திருடிய பொருளை எடுத்துக் கொண்டு ஓடுகிற திருடன், தானும் "திருடன், திருடன்" என்று கூவுவது போல தந்திரமாக பேசியுள்ளீர்கள். திருடனின் புத்தி உங்களுக்கு இருப்பது இயற்கைதானே!

இதற்கு மேல் என்ன புதிதாய் கலவரம் செய்யப் போகிறீர்கள்?

இந்த பேச்சுக்கு நியாயப்படி உங்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.

உங்களின் எடுபிடி எடப்பாடி முதல்வராய் இருக்கிற திமிரில்தானே உங்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறது!!!!

எல்லாம் மாறும். எங்களுக்கும் காலம் வரும்

பின் குறிப்பு : சிறப்பான படத்திற்கு தோழர் வெண்புறா சரவணன் அவர்களுக்கு நன்றி
 
 

1 comment:

  1. //இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக, ஏ.பி.வி.பி, பஜ்ரங்தள் என்று பல பெயர்களில் செயல்பட்டாலும் அனைத்து சாக்கடைகளும் உற்பத்தியாவது நாக்பூரில் உள்ள கழிவுநீர்க் குட்டையில் இருந்துதான் என்பது அனைவரும் அறிந்ததே.// - True

    ReplyDelete