Sunday, July 2, 2017

ஜி.எஸ்.டி - பேராசியர் என்ன சொல்கிறார்?

ஜி.எஸ்.டி என்பது மக்கள் மீது மோடி தொடுத்த அடுத்த தாக்குதல் என்பதை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையில் தலைவராக பணியாற்றிய பேராசியர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுவதைக் கேளுங்கள்.  
இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜி‌எஸ்‌டி. யில் ஒரு வரிவிகிதம் என்பது கிடையாது பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன(0%, 5% 12% 18% 28%). இதில் மிக முக்கிய அம்சம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இன்றய சூழலில் சில வரிவிகிதங்களை ஜி‌எஸ்‌டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. 

மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜி‌எஸ்‌டி கவுன்சில் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது அதனால் அது மிக கடினமான காரியமாகும். இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். அமெரிக்கா முன்னணி முதலாளித்துவ நாடு. ஆனால் அங்கு வரிவிதிப்பு உரிமைகள் பலவும் மாநிலங்களிடம் உள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் வரிவிகிதங்கள் வேறுபடுகின்றன. ஏன் இங்கு இப்படி மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றை வரி விதிப்பு முறை திணிக்கப்படுகிறது? இரண்டாம் அம்சம் என்னவெனில், வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்தின், சட்டமன்றங்களின் கையில் இருந்தது. இப்பொழுது ஜீ எஸ் டி கவுன்சில் கைக்கு போய்விட்டது. அதிலும் மத்திய அரசின் கை ஓங்கிவிட்டது. இது ஜனநாயகத்திற்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.

ஜி‌எஸ்‌டி அமல்படுத்திய பின்னர் வரி குறையும் என்கிறார்கள் ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.ஜி‌எஸ்‌டி சட்டம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், மது போன்ற பொருட்களை வெளியில் வைத்திருக்கிறது. இவற்றின் விற்பனை மூலம் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கும் வாட் மூலம் மாநில அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. (மதுவை ஜி‌எஸ்‌டி கீழ் கொண்ட வர தனி சட்ட திருத்தம் தேவை.) ஜிஎஸ்டி வரி சுமையை குறைக்கும் என்பதில் உண்மை இல்லை.இந்த வரி விதிப்பானது நுகர்வோர்களை பாதிக்கப்பட கூடியதாக அமையும்.பணக்காரர்களிடம் இருந்து முறையாக நேர்முக வரிகளை வசூலிப்பதற்க்கு பதிலாக சாதாரண மக்களின் சுமைகளை கூட்டியிருக்கிறது. இது மட்டுமின்றி, சிறு குறு தொழில்முனைவோர், வணிகர்கள் அரசு நிர்வாக அமைப்பின் கடுமையான தொந்தரவுக்கும் ஊழல்சார் நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.

மத்திய அரசு ஒற்றை மொழி ,ஒற்றை மதம் கலாச்சாரத்தை திணிக்க முயல்வதைப் போன்றே ஒற்றை வரி என்று கொண்டு வந்திருக்கிறார்கள். 8 கோடி, 20 கோடி மக்கள் கொண்ட மாநிலங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நகராட்சி போல் நடத்துவது தவறு. 

மத்திய அரசின் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் முறைசாரா தொழில்கள், சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராகவும் உள்ளன .உழைப்பாளர்கள் பணி நிலமைகளை முறைப்படுத்தி பயன்களை தொழிலாளிகளுக்கு தர அரசு தயாராக இல்லை.பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் உழைப்பாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை கொண்டுவந்துள்ளனர். இதேபோல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தோல்விகண்ட பிறகு, மாநில சட்டங்கள் மூலம் பாஜக மாநிலங்களில் அதே காரியத்தை செய்துவருகின்றனர். 

செல்லாக்காசு நடவடிக்கையும், விலங்கு சந்தைகள் தொடர்பான விதிமுறைகள் அறிவிக்கையும் இதே வகையில் தான் அமைந்துள்ளன. கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கான நடவடிக்கையாகத் தான் ஜிஸ்டியையும் பார்க்க முடிகிறது".

6 comments:

 1. எதுவுமே புரியவில்லை!

  ReplyDelete
 2. அப்புறம் ஏன் சீனாவில் ஜி எஸ் டி வரி கொண்டு வந்தாங்க. கார்பரேட் கம்யூணிச தோழர்களுகு பயன் பெறவா. ஏதாச்சும் தினமும் மோடிய திட்டணும், இன்றைய கோட்டா இது.

  ஆதார் எண் - 4453 78 3890

  ReplyDelete
  Replies
  1. அவர் சொன்ன கருத்துக்களுக்கு பதில் சொல்லாம திசை திருப்பறீங்க பாருங்க, அதுதான் காவிகளோட கபட வேடம்.

   சீனாவோட ஒப்பிடக் கூடிய விதத்தில் இந்தியப் பொருளாதாரம் கிடையாது என்பதையும் அங்கே இந்தியா போன்ற 28 % ஸ்லாபெல்லாம் கிடையாது என்பதையும் மறைக்கறீங்க பாருங்க, இது அக்மார்க் பாஜக பிராடு

   ஒரு நாளைக்கு திட்ட பல்வேறு விஷயங்களை மோடி & கோ கொடுத்திக்கிட்டே இருக்காங்க, நேரம்தான் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில் ஏதோ தினசரி கோட்டா என்று சொல்வது ஆர்.எஸ்.எஸ் மோசடி உத்தி

   தான் ரொம்ப உத்தமர் என்று காண்பித்துக் கொள்வதற்காக 12 இலக்க ஆதார் எண்ணிற்கு பதிலாக 10 இலக்க எண்ணை போட்டீங்க பாருங்க, இதுதான் உலக மகா டுபாக்கூர் நீங்க என்பதன் அடையாளம்

   Delete
 3. Dear ramanjee, tell me jee. Because of GST not only communists but also BJPwalas affected. Then why those idiots accepting GST.

  ReplyDelete
 4. adhaney

  sollunga ji

  sollunga


  Raaj Bhaskar.

  ReplyDelete
 5. GST விதிக்கப்பட்ட பிறகு ஒரு ஹோட்டலில் நீங்கள் உங்கள் நண்பரும்
  இரு தோசை , ஒரு பை டூ காபி சாப்பிட்ட பிறகு வரும் பில் 185 ரூபாய. இதில்
  ஹோட்டல் காரருக்கு 165 ரூபாய் 10 ருபாய் மத்திய அரசுக்கு. 10 ருபாய்
  மாநில அரசுக்கு.. சாப்பிட்ட உணவுக்கு வரி வசூலிக்கும் அரசுகள்
  நமக்கு திரும்பி என்ன செய்தன? இதற்க்கு ஏதாவது கணக்கு உண்டா ?
  ஹோட்டல் காரர் உணவுப்பொருள்களை வாங்கும் போதும் GST கட்டி இருப்பார்
  நாம் பில் கொடுக்கும்போதும் GST.. ஒரே கல்லில் இரு மாங்காய் .

  ReplyDelete