Wednesday, July 5, 2017

இஸ்ரேல் – மோடி – வரலாற்றுப் பிழை

மோடி இஸ்ரேல் போயிருக்கிறார்.

மோடியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவும் “தீவிரவாதத்தை ஒழிப்போம்”  என்று கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவையும் மோடியையும் நேசிப்பதாக நெதன்யாஹூ சொல்லியுள்ளார். எழுபது ஆண்டுகளாக இத்தருணத்திற்காகவே காத்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் சொல்லியுள்ளார்.

இந்தியா இஸ்ரேல் உறவு பல நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்டது என்று மோடி புகழ்ந்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு இஸ்ரேல். தீவிரவாதச் செயல்கள் மூலமே உருவான இஸ்ரேல் இன்றளவும் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்திக் கொண்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் இயற்கையாக இறந்து போகிறவர்களை விட பல மடங்கு மக்கள் இஸ்ரேலினால்தான் இறந்து போகிறார்கள்.

மோடி எப்பேற்பட்ட பயங்கரவாதி என்பது நாமெல்லாம் அறிந்ததே! நெதன்யாஹூ மோடியைக் காட்டிலும் மோசம். இவர்கள் இணைந்து  தீவிரவாதத்தை ஒழிப்பதென்று சொல்வது ஒரு குரூரமான நகைச்சுவை.

இஸ்ரேல் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை வாங்கும் பிரதானமான நாடாக இந்தியா மாறுகையில் நெத்ன்யாஹூ இந்தியாவையும் மோடியையும் நேசிப்பதில் வியப்பென்ன இருக்கிறது! எல்லா வணிகர்களுமே அவர்களின் முக்கிய கஸ்டமர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்தால்தானே தொழில் சுமுகமாக நடக்கும்!

எழுபதாண்டுகளாக காத்திருந்தோம் என்று சொல்வதன் அர்த்தம் புரிகிறதா?

இஸ்ரேல் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தலை கீழாக மாறிப் போனதைத்தான் துள்ளிக் குதிக்காத குறையாக சுட்டிக் காட்டுகிறார். இஸ்ரேல் எனும் தேசத்தின் உருவாக்கத்தை ஏற்காத நாடு இந்தியா. பாலஸ்தீன மக்களுக்கு பாரம்பரியமாக துணை நின்ற நாடு இஸ்ரேலுடன் எந்த வித உறவும் பல்லாண்டுகளாக வைத்துக் கொள்ளாத நாடு.
வாஜ்பாய் காலத்தில் மாறியது இந்த நிலை. இதற்கு முன்பாக பிரணாப் முகர்ஜியும் ஹமீது அன்சாரியும் இஸ்ரேல் சென்றிருந்தாலும் அவர்கள் அந்த பயணத்தில் பாலஸ்தீனத்திற்கும் சென்றுள்ளார்கள். இப்போது மோடியின் பயணம் இஸ்ரேலோடு முடிந்து போகிறது. பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறோம் என்று இந்தியா சொன்னாலும் அது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்று நெதன்யாஹூவிற்கு தெரியும். அதனால்தான் எழுபது ஆண்டுகளாக காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்.

பல நூற்றாண்டு கால பாரம்பரிய நட்பு என்று மோடி சொல்கிறார். எத்தனை நூற்றாண்டுகளாக இஸ்ரேல் எனும் நாடு இருக்கிறது என்று சொல்வாரா? யூத வெறியை அடிப்படையாகக் கொண்ட ஜியோனிஸம்) (Zionism என்ற தத்துவம் முன்னுக்கு வந்ததே 1890 ம் வருடம்தான்.

அப்படி இருக்கையில் எங்கிருந்து வந்து பல நூற்றாண்டு கால பாரம்பரிய நட்பு?

மோடி இஸ்ரேலுக்குச் சென்றதும் வரலாற்றுப் பிழை.
இஸ்ரேல் பற்றி மோடி சொன்ன வரலாற்றிலும் பிழை.10 comments:

 1. your article is historical blunder, if you cannot understand the geo political scenarios of APAC , i am extremely sorry for that mate

  ReplyDelete
 2. Why dont you elaborate on it? We will discuss

  ReplyDelete
 3. Great moment for india. India and israel friendship will rule the world.if you want to talk about Jews plz start from the history fully. Talking half only is biased.

  ReplyDelete
  Replies
  1. இந்தியப் பால் குடத்தில் விழுந்த நச்சுத்துளி இஸ்ரேலுடனான நட்பு. இரண்டு வெறியர்கள் இணைவது உலக அமைதிக்கு அபாயம்

   Delete
 4. இன்னொரு பெரிய முரண்பாடு இருக்கிறது. நாளை எழுதுகிறேன்

  ReplyDelete
 5. தீவிரவாதத்தை ஒழிக்க நினைப்பது நல்ல விஷயம்தானே. எந்த யாருடைய தீவிரவாதம் என்பதில் பிரசனை இருக்கிறது . கண்ணுக்கு கண் என்பதே தீவிரவாதத்தின் அடிப்படை. தன்மதமே பெரியது என்கிறான் யூதன். இந்துவும் அதைத்தான் சொல்கிறான். அதை ஏற்றுக்கொள்ளாதவனின் கண்ணை பல்லை உடை என்கிறார்கள் இருவரும். இந்த அற்புதக் கொள்கையை உலகம் முழுவதும் பின்பற்றட்டும். உயிரோடு எவனும் இருக்க முடியாது. கண்ணுக்கு கண் என்ற இஸ்ரவேலின் கொள்கையை மோடி புகழ்கிறார் தன் கொள்கையும் அதுவே என்று. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. //தன்மதமே பெரியது என்கிறான் யூதன். இந்துவும் அதைத்தான் சொல்கிறான்.//

   இதர மதங்கள் என்ன தான் சொல்கின்றன? நாங்க எல்லாம் சிறியவர்கள், அடக்கமானவர்கள் என்கின்றனவா?
   உலகத்திலே என்னை தவிர வேறு கடவுள்கள் எவருமே கிடையாது, என்னை வணங்குவதற்காகவே மனிதர்களை படைத்தேன் என்று இஸ்லாமிய மதகடவுள் சொல்கிறாரே!
   //தன்மதமே பெரியது என்கிறான் யூதன். இந்துவும் அதைத்தான் சொல்கிறான். அதை ஏற்றுக்கொள்ளாதவனின் கண்ணை பல்லை உடை என்கிறார்கள் இருவரும்.//

   தன்மதமே பெரியது என்பதை ஏற்றுக்கொள்ளாதவனின் கண்ணை பல்லை உடை என்று யூதர்களும்,இந்துக்களும் சொன்னார்களா! எப்போது?
   //கண்ணுக்கு கண் என்பதே தீவிரவாதத்தின் அடிப்படை. ..
   இந்த அற்புதக் கொள்கையை உலகம் முழுவதும் பின்பற்றட்டும். உயிரோடு எவனும் இருக்க முடியாது. கண்ணுக்கு கண் என்ற இஸ்ரவேலின் கொள்கையை மோடி புகழ்கிறார் தன் கொள்கையும் அதுவே என்று.//

   கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது.. இது எல்லாம் இஸ்ரவேலின் கொள்கையே கிடையாது. இந்த அற்புதக் கொள்கை என்பது அல்லாஹ்வால் எழுதபட்ட இஸ்லாமிய மதத்தின் ஷரியா சட்டங்களாகும்.

   Delete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. நீ ஒளிந்து கொண்டு அசிங்கமாய் எழுதுவாய். அதை நான் பிரசுரிக்க வேண்டுமா? மறுபடியும் சொல்கிறேன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிக்க நான் யேசுநாதர் இல்லை. அடித்தால் திருப்பி அடி என்று தைரியம் கொடுத்த தோழர் சீனிவாசராவ் அவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன்.

   நாகரீகமான எதிர்க்கருத்துக்களை நான் என்றும் பிரசுரிக்காமல் இருந்தது. அந்த நாகரீகத்தை உன்னை மாதிரியான அநாகரீகப் பேர்வழியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.

   உன்னால் ஏன் உன் அடையாளத்தோடு வர முடியவில்லை. மீண்டும் சொல்கிறேன். நீ ஒரு மோசடிப் பேர்வழி. உன் பொய் முகம் கலைந்து விடும் என்ற பயம் காரணம்.

   இனி உனக்கு பதில் கிடையாது

   Delete