Saturday, July 22, 2017

இதுதாண்டா இந்தியப் போலீஸ்



நான்கு போலீஸ்காரர்கள் பற்றி 



விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதி ஆலயத்தில் தலித் மக்களை கோவிலுக்குள் விடுவதில்லை. அதற்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துகிறது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அப்போதைய குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ  தோழர் ஜி.லதா உள்ளிட்டவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடக்கிறது. தோழர் ஜி.லதாவின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்தார்கள். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜிற்கு தமிழக அரசு டி.ஐ.ஜி பதவி உயர்வு கொடுத்தது.

சமீபத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பெண்களின் மீது தாக்குதல்களை நடத்தியது தமிழக காவல்துறை. திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி  என்ற பெண்மணியை ஓங்கி அறைந்து அவரது செவித்திறனை பாதிக்க வைத்த கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி திமிராக நடந்து கொண்ட பாஜககாரர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்த ஷ்ரேஸ்தா தாக்கூர் என்ற காவல்துறை பெண் அதிகாரியை யோகி அரசு நேபாள எல்லைக்கு மாற்றலில் தூக்கி அடித்தது.

சிறைச்சாலைக்கு உள்ளே சசிகலா, சகல வசதிகளையும் அனுபவிக்க சிறைத்துறை டி.ஜி.பி இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்பதை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி ரூபா போக்குவரத்துத்துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.

கடமையை ஒழுங்காக நிறைவேற்றினால் தண்டனை.
கொடூரத் தாக்குதல் நடத்தினால் பதவி உயர்வு.

நன்றாகத்தான் இருக்கிறது நம் நாடு.

5 comments:

  1. கடமையைச் செய்பவர்களும், கண்ணியமானவர்களும் காயப்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

    ReplyDelete
  2. இந்திய போலீஸ் வெட்ககேடு.

    ReplyDelete
  3. please note, both the punished officers are ladies, another example for pennadimaiththanam.

    ReplyDelete