Monday, July 10, 2017

மோடி மோசடி இம்முறை மூன்றுதான்

மோடியின் இஸ்ரேல் விஜயத்தை முன்னிட்டு அவரது பக்த கேடிகள் "இஸ்ரேல் ஸ்பெஷல்  போட்டோஷாப் மோசடிகள்" மூன்றை அரங்கேற்றினர்.

எப்போதோ, பாரிஸீல் யாரோ யாரையோ வரைந்த தெரு ஓவியத்தை இஸ்ரேலில் மோடியின் படத்தை வரைந்ததாக கதை விட்டார்கள்.



மோடியின் இஸ்ரேல் விஜயத்தை முன்னிட்டு இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியக் கொடி பட்டொளி வீசி பறக்குது பார், இந்தியனாக இருந்தால் பகிர்ந்து கொள் என்று சுற்றுக்கு விட்டார்கள். அந்த கட்டிடத்தில் பறக்கும் இந்தியக் கொடி இவர்களாக ஒட்டி வைத்தது. இந்த டுபாக்கூர் வேலையை பகிர்ந்து கொள்ளாதவர்கள், தேச விரோதிகளாம்.



இந்தியாவை நேசிப்பதாக நெதன்யாஹூ சொன்னது வெறும் வார்த்தை அல்ல, அவரது கோட்டைப் பார்த்தீர்களா? அங்கேயும் மூவர்ணக் கொடி என்று ஒரு படம். இந்த போட்டோஷாப் படத்தைத் தவிர வேறு எங்கும் நெதன்யாஹூவின் கோட்டில் இந்தியக் கொடியை காணவில்லை. 




மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்தும் இந்த போட்டோஷாப் மோசடிப் பேர்வழிகள், பொய்ப்படம் தயாரிக்க தயங்குவதில்லை.

ஏனென்றால் அதையும் நம்பி பகிர்ந்து கொள்ள ஒரு பெரிய முட்டாள் கூட்டம் இந்தியாவில் உள்ளதல்லவா!

அந்த மூடர்களை நம்பித்தான் இந்த மோசடிப் பேர்வழிகளின் அரசியலே நடைபெறுகிறது. 

6 comments:

  1. All there are true sir.. if can't believe I'll share original

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Though what you said is right, I dont wish to have bad words in my blog

      Delete
    2. Reminds me of Famous Goundamani-Senthil Dialogue Nathas unakku yen intha velai. anne, oru vilambaram -

      Delete
  3. அநானி அப்பு திரு திருடனுக்கு தேள் கொட்டுனா எப்டி முழிப்பா'know'

    ReplyDelete