Thursday, July 20, 2017

அடுத்த துண்டுப் பிரசுரம் ???????



துண்டுப் பிரசுரமும் குண்டர் சட்டமும்

கள்ளச்சாராயம் காய்ச்சுபவன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன், செயின் அறுப்பவன், மாமூல் வாங்கும் ரௌடிகள். கூலிக்கு கொலை செய்பவன், ஆகியோர்தான் குண்டர்கள் என்று நினைத்திருந்தால் அது மிகவும் தவறு என்று எடப்பாடி எடுபிடி அரசு சொல்கிறது.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது,
அரசின் அபாயகரமான திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் வழங்குவது

ஆகியவற்றைத்தான்

ஆபத்தான நடவடிக்கைகள் என்று கருதி குண்டர் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது.

பழனியிலே கலாட்டா செய்த மன்னார்குடி மடத்து ஜீயர் உள்ளிட்ட பசுக்குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தயாராக இல்லாத அரசு இது.

ராமநாதபுரத்திலே மதக்கலவரத்தை தூண்டி விட விஷத்தையும் பொய்களையும் பரப்பிய எச்.ராசா மீது சுண்டு விரலைக் கூட உயர்த்த தைரியமில்லாத அரசு இது.

தமிழகம் கலவர பூமியாகும் என்று பகிரங்கமாக அறிவித்த மத்திய மந்திரி பொன்னாரைக் கண்டிக்கக்கூட திராணி இல்லாத அரசு இது.

ஆனால் அரசின் நடவடிக்கைகளையோ கொள்கைகளையோ விமர்சிப்பவர்கள் மீது தடியடி கொண்டு தாக்குதல் நடத்துவது என்பதை நடைமுறையாக்கி உள்ள இந்த அரசு, இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி குண்டர் சட்டத்தை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது.

சகிப்பின்மைக்கு உதாரணமாக திகழும் மோடியின் கால்களில் வீழ்ந்து கிடப்பதால் தமிழக அரசும் மோடி அரசு போலவே மோசமாக திகழ்கிறது.

அடிமை இந்தியாவில் துண்டு பிரசுரத்தை மக்களவையில் வீசிய வீரன் பகத்சிங்கிற்கு தூக்கித்தண்டனை அளித்தது பிரிட்டிஷ் அரசு.

சுதந்திர இந்தியாவிலோ தமிழகத்தின் அடிமை அரசு  குண்டர் சட்டத்தை பயன்படுத்துகிறது.

வருடங்கள் உருண்டோடினாலும் அரசுகள் மாறுவதில்லை  

போராடும் அமைப்புக்கள் மக்களிடம் எடுத்துச்செல்லும் அடுத்த துண்டுப்பிரசுரம், இந்த அராஜகத்தை கண்டிப்பதாகத்தான் இருக்க வேண்டும். பார்ப்போம் எத்தனை பேரை இந்த அரசால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள முடியும் என்பதை.

1 comment:

  1. //"போராடும் அமைப்புக்கள் மக்களிடம் எடுத்துச்செல்லும் அடுத்த துண்டுப்பிரசுரம், இந்த அராஜகத்தை கண்டிப்பதாகத்தான் இருக்க வேண்டும். பார்ப்போம் எத்தனை பேரை இந்த அரசால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள முடியும் என்பதை"//

    ஒரு திருத்தம். அந்த கைதை கண்டித்து அல்ல .அந்த கைதுக்கு காரணமான அந்த துண்டுப்பிரசுரம் தான் அனைவராலும் ஏந்தி செல்லப்பட வேண்டும்.அதில் சில வரிகளில் நமக்கு மாறுபாடு இருக்குமென்றால் கூட

    ReplyDelete