Thursday, July 13, 2017

ஜெயமோகனின் புதிய அயோக்கியத்தனம் . . .





சர்வதேச இலக்கிய சக்ரவர்த்தி என்று தன்னைக் கருதிக் கொண்டு தன் கால்களை நக்கிப் போற்றாத அனைவரையும் தூற்றிக் கொண்டு வசை பாடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ள ஜெயமோகன் எனும் நச்சுப்பாம்பு “இடங்கை இலக்கியம்” என்ற பெயரில் முற்போக்கு சிந்தனை உடைய எழுத்தாளர்களை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்.

“இடது சாரி” இலக்கியம் என்பதற்குப் பதிலாக “இடங்கை” என்ற வார்த்தைப் பிரயோகமே அவரது அற்பத்தனத்தின் வெளிப்பாடு. அதனை அம்பலப்படுத்திய தோழர் யமுனா ராஜேந்திரன் மீது பாய்ந்து குதறி விட்டார். அவரது விமர்சனத்தை சின்னத்தனம் என்று சொல்கிறார் அந்த பெரிய மனிதர்.  

இடது கையின் அந்த வேலை முக்கியமானது ஆசானே! இல்லையென்றால் நீங்களும் உங்கள் எழுத்தைப் போலவே நாறிப் போய் விடுவீர்கள். இடங்கைக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் வரலாற்றுக்கு முரணானது. அதை நீங்களும் உண்ர்ந்துள்ளதால்தான், நீங்களே கடிதம் எழுதி நீங்களே பதில் சொல்கிற பதிவுகள் “இடதிலக்கியம்” என்று மாற்றி விட்டீர்கள்.

பகத்சிங் போன்ற புரட்சியாளர்களால்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட மக்கள் மனதில் அச்சம் உருவானது என்று இந்த அற்பன் அபத்தமாக எழுதியதிலிருந்து இவரது எழுத்துக்களை எதற்கு தேவையில்லாமல் படித்து எதற்கு தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பக்கம் போகவே இல்லை.

தோழர் சம்சுதீன் ஹீரா எழுதிய “மௌனத்தின் சாட்சியங்கள்” நாவல் குறித்து ஆசான் எழுதியுள்ள விமர்சனத்தை படித்து ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறம் கோபமாகவும் வந்தது.

எல்லாம் தெரிந்த மேதாவியாக தன்னை எப்போதும் முன்னுறுத்திக் கொள்ளும் ஜெமோ தான் ஒரு அறைகுறை என்பதை அவரே நிரூபித்துக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சி.

மௌனத்தின் சாட்சியங்களை முழுமையாக படித்திருந்தாலோ, அதை உள்வாங்கி இருந்தாலோ “அந்த நாவலை வஹாபியிசம் என்றோ இடதுசாரி போர்வையில் முன்வைக்கப்படும் மத வெறி” என்றோ அவரால் எழுதி இருக்க முடியாது. காலம் முழுதும் ஹிந்துத்துவ வெறியை பரப்புவதால் அடுத்தவரையும் அப்படியே கருதி விட்டார் போல. 

சுஜாதாவின் மனைவி சொல்லாததை சொன்னதாக இவரே எழுதி கடைசியில் அந்த பேட்டி எடுத்தவர் மீது பழி போட்டிருப்பார். யார் பேட்டி எடுத்தார் என்று பார்த்தால் அவர் ஒரு இஸ்லாமியர். அப்போது எழுதிய பதிவு இங்கே உள்ளது. தோழர் சம்சுதீன் ஹீரா ஒரு இஸ்லாமியர் என்பதால் கூட ஜெமோ தன் சில்லறை புத்தியை வெளிப்படுத்தியிருக்கலாம்.

பொறாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்பட்ட நூல் “மௌனத்தின் சாட்சியங்கள்” பல அமைப்புக்கள் கடந்த ஆண்டின் சிறப்பான நாவல் என்று விருது கொடுத்து கௌரவித்தன. தன்னுடைய அடிமைக் கூட்டத்தைத் தாண்டி அடுத்தவனுக்கு விருதோ, அங்கீகாரமோ கிடைத்தால் ஜெமோவால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?

“மௌனத்தின் சாட்சியங்கள்” படித்து அதன் தாக்கத்திலிருந்து வெளி வர எனக்கெல்லாம் இரண்டு நாட்களுக்கு மேலானது. உறக்கத்தை தொலைக்க வைத்த நூல். மத அடிப்படைவாதமும் மத வெறியும் சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை வலியுடன் சொல்கிற நூல். மிகவும் தாக்கத்தை உருவாக்கிய நூல் குறித்து முன்பு நான் எழுதிய அறிமுகத்தினை இந்த இணைப்பின் மூலம்  சென்று அவசியம் படியுங்கள்.

இந்து முன்னணி, அல் உமா ஆகிய இரு அமைப்புக்கள் எப்படி மத வெறியை தூண்டி விட்டது என்பதை முழுமையாக தோலுரித்துக் காட்டியிருப்பார். கோவை குண்டு வெடிப்புக்களில் சிறிதும் தொடர்பில்லாத இஸ்லாமிய வாலிபர்களின் இளமைக்காலம் பொய் வழக்குகளால் எப்படி தொலைந்து போனது என்ற உண்மையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்திருப்பார்.

மணிரத்னம் எடுத்த “பம்பாய்” போன்ற நடுநிலை வேஷமெல்லாம் இந்த நூலில் கிடையாது. கோவையில் இரு தரப்பு மத வெறியர்களும் உருவாக்கிய மோசமான விளைவுகளை நாவல் வடிவில் ஆவணப் படுத்தியுள்ளார்.

மதவெறிக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கிற ஒரு படைப்பை, மத வெறியை முன் வைக்கிறது என்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அபாண்டமாக சொல்வது வடி கட்டின அயோக்கியத்தனம். ஜெயமோகன் என்ற அற்பத்தனம் கொண்டவரால் மட்டுமே இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை செய்ய முடியும்.

செய்வதெல்லாம் நச்சு வேலை. இதிலே இவரைப் போல அழகியலோடு வேறு யாரால் எழுத முடியும் என்ற சுய தம்பட்டம் வேறு. நல்ல பாம்பு கூட அழகுதான்,

இரா.முருகவேளின் முகிலினி படித்துள்ளேன். நன்றாகவே இருந்தது. மிளிர்கல் இன்னும் படிக்கவில்லை. ஜெயமோகன் சரியில்லை என்று சொல்வதால் அந்த நூல் மிகவும் சிறப்பாகத்தான் இருக்கும். கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டும். அது போலவே “தறியுடன்”. நாவலையும் படித்திட வேண்டும்.

வாழ்த்துக்கள் தோழர் சம்சுதீன் ஹீரா.

ஆசானின் அயோக்கியத்தனமே உங்கள் படைப்பின் மேன்மைக்குச் சான்று.

2 comments:

  1. அந்த சொரணை கெட்ட மனுசன் திட்டுவாங்கறதுக்குனே எழுதுவான் போல.

    ReplyDelete
  2. என்ன திட்டினாலும் தொடச்சுப் போட்டுட்டு மறுபடியும் அப்படியேதான் எழுதுவான்

    ReplyDelete