அவர் அப்படி ஒன்றும் சங்கிகளுக்கு எதிராக உறுதியோடு நின்றவர் அல்ல. அவர்களோடு நீண்ட காலம் கூட்டணியிலும் இருந்தவர்தான்.
பிரதமர் கனவில் இருந்தார். பிரதமராக வேறு ஒருவரை கூட்டணிக்கட்சி முன்னிறுத்தியதும் "திராட்சை கிட்டாத நரி"யாக வெளியேறினார்.
மக்களவைத் தேர்தலில் இடங்கள் பறி போனதும் கைவசம் உள்ள முதல்வர் பதவியும் நழுவிப் போய் விடுமோ என்று பதறிப் போய் முன்னாள் எதிரிகளோடு கூட்டு வைத்து ஆட்சியை அடுத்த தேர்தலில் தக்க வைத்துக் கொண்டார்.
அந்த முன்னாள் எதிரி அப்போதும் ஊழல் பேர்வழி என்றே அறியப் பட்டவர். சொல்லப்போனால் தேர்தலில் போட்டியிடும் தகுதி கூட இல்லாதவர். ஆனாலும் இணைந்தார். வென்றார்.
அந்த முன்னாள் எதிரி ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியானவர். மத வெறியை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் காவிகளை எதிர்ப்பதில் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர்.
தேர்தலில் தோற்றுப் போனாலும் குதிரை பேரம், மிரட்டல்கள், ஆளுனர் மோசடி என்று ஒவ்வொரு மாநிலமாக அரசுகளை தங்களின் கைப்பிடிக்குள் கொண்டு வரும் ஆளும் கட்சிக்கும் அவர் என்றுமே ஒரு உறுத்தல்தான்.
கோபித்துக் கொண்டு போன முன்னாள் கூட்டாளியை கோவிந்தைக் காண்பித்து அரவணைத்துக் கொண்டார்கள். நிரந்தர எதிரியை ஏவல் எடுபிடியான சி.பி.ஐ மூலம் சோதனைகள் செய்தார்கள்.
முன்னாள் கூட்டணி உத்தம வேடம் போட்டு பதவி விலகல் நாடகமும் நடித்து விட்டார். புதிய அடிமையாக மாறி விட்டார்.
வெளியிலிருந்து ஆதரவா அல்லது கூட்டணி அமைச்சரவையா?
பேரம் என்னவென்று விரைவில் தெரியும்.
எடப்பாடி வகித்து வந்த அடிமைப் பதவியில் இன்று நிதிஷ்குமார் அமர்ந்து விட்டார் என்பதுதான் யதார்த்தம்.
bunch of liers in tamilnadu. everbody know who they are? it is very easy to guess. we dont want them but they rule us. their gen sec is in jail. deputy g s is on bail. what ever charges you lay against them, they say what is the proof. and they say they give AMMA AATCHI.
ReplyDeleteஅந்த முன்னாள் எதிரி பல வருடங்களுக்கு முன்னர் பாட்னா வன இலாகா
ReplyDeleteஒரு அறை குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மக்களுடன் குசேலர்
போல வாழ்ந்து வந்தவர்.இப்போது 20000 கோடிக்கு சொந்தக்காரர். அவருக்கு
நிதீஷ் பரவாயில்லை.