Tuesday, August 1, 2017

கண்டிப்பாய் “அ.தி” வந்தே தீரும்




மாடுகளாய்  இல்லாமல்
மனிதர்களாய் இருப்பினும் கூட
மூச்சு விட்டு உயிர் வாழ
இன்னும் இருக்கிறது அனுமதி,
எல்லோருக்கும் அந்த
உரிமை இல்லாத போதும்..

ரேஷன் பொருட்களை மறுத்தாலும்
உணவு உண்ணக் கூட
இன்னும் உண்டு அனுமதி,
அது என்னவென்று
தீர்மானிக்கும் உரிமை
இல்லாத போதும்.

கூடுதல் விலைக்குத்தானே
சமையல் எரிவாயு?
விறகுக்கா மாறச் சொன்னார்கள்?

பதினைந்து லட்சம் பொய்யை
பொறுத்துக் கொண்டீர்,
செல்லா நோட்டெனெச் சொல்லி
வீதியில் நிறுத்திய போதும்
புன்னகையோடு மௌனம் காத்தீர்.
வரி என்று நிகழும்
வழிப்பறிக்கும் வழி விட்டீர்.

தேசத்துரோகி என்று
திட்டப்பட்டாலும் கூட
கருணையுள்ளம் கொண்டு
நாடு கடத்தாமல் இருப்பதற்கு
நன்றி சொல்வீர்.

ஆனாலும் கூட
நம்பிக்கையாய் காத்திருப்பீர்
இன்னும் இருக்கும்
இரண்டாண்டுகளுக்குள்
“அச்சே தின்”
கண்டிப்பாய் வந்தே தீரும்
என்று நம்பிக்கையாய் காத்திருப்பீர்.

கண்டிப்பாய் வந்தே தீரும்
நம்மை புதைத்த கல்லறையில்
நாளை ஊறப்போகும் புழுக்களுக்கு.
நல்லிரையாய் மாறிப் போன
நம்மாலே.

1 comment:

  1. இந்தியாவுக்கு "அச்ச்சே தின்" 2019 தேர்தலில் பி ஜே பி
    கட்சி தோல்வி அடையும் போது ஆரம்பம் ஆகும்.
    இந்த மூன்று வருடங்களே போதும் இவர்களின் ஆட்சி செய்த
    லட்சணம். ஊழல் காங்கிரெஸ் பரவாயில்லை என்று
    நினைக்க வைத்து விட்டார்கள் அப்பா மன்மோஹன் சிங்
    நீயே பரவாயில்லை என நினைக்க வைத்து விட்டார்கள்

    ReplyDelete