என்ன?
நம்ப முடியவில்லையா?
உண்மை. சத்தியமாய் நான்
சொல்வதெல்லாம் உண்மை.
ஆம். கோவா மாநில பாஜக முதல்வர் மனோகர்
பாரிக்கர், அம்மாநில சட்டப் பேரவையில் பேசுகையில்
“கோவாவில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு
வராமல் அரசு பார்த்துக் கொள்ளும். தேவைப்பட்டால் அருகில் உள்ள கர்னாடக மாநிலம்
பெல்காமிலிருந்து மாட்டிறைச்சியாகவே வரவழைப்போம். பக்கத்து மாநிலங்களிலிருந்து
மாடுகளைக் கொண்டு இங்கே உள்ள அரசு மாடு வெட்டும் நிலையத்தில் வெட்டுவதிலும்
அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
ராஜஸ்தான், உ.பி, ம.பி, ஜார்கண்ட் போன்ற
மாநிலங்களில் மாட்டுக்குண்டர்கள் தொடர்ந்து மாட்டரசியல் நடத்தி கொலை வேட்டை
நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது கோவாவில் மட்டும் மாட்டிறைச்சிக்கு ஏன் தடை
விதிக்க அம்மாநில பாஜக முதல்வரால் முடியவில்லை?
அது அம்மாநில மக்களின் மிக முக்கியமான
உணவு.
கோவாவிற்கு வரும் வெளிநாட்டு
சுற்றுப்பயணிகளுக்கும் கூட.
ஆக, மாட்டுக் குண்டர்களுக்கு கோவாவில்
வேலை கிடையாது.
ஒரே நாடு, ஒரே உணவு என்ற அபத்தமான பாஜக
முழுக்கமும் கோவாவிற்கு பொருந்தாது.
பாஜக விற்கு கொள்கை என்று ஒரு
புடலங்காயும் கிடையாது. அவ்வளவுதான்.
மாட்டிறைச்சியும் அவர்கள் அரசியல்
சூதாட்டத்தில் ஒரு பகடைக்காய்தான்.
மனிதர்களையே நேசிக்காத அவர்களால் எப்படி
மாடுகளை மட்டும் நேசிக்க முடியும்?
"மனிதர்களையே நேசிக்காத அவர்களால் எப்படி மாடுகளை மட்டும் நேசிக்க முடியும்?" --- அருமை
ReplyDelete"மாட்டுக்குண்டர்கள்" --- சிறப்பு