Thursday, July 6, 2017

வெட்டு ராசா வெட்டு





வெட்டு ராசா வெட்டு
வெட்டுவது என்ன புதுசா உனக்கு?

மாட்டிறைச்சி பேரைச் சொல்லி
மனுசங்களை வெட்டினே!

பாத்தா அபசகுனமுன்னு
மரத்தை இப்போ வெட்டறே!

வெட்டு ராசா வெட்டு
ஏதோ ஒன்னை
எப்போதும் வெட்டனும்.
வெட்டு ராசா வெட்டு

பாத்தா தீட்டுன்னு
மனுசனத்தான் ஒதுக்கி வச்ச,
மரத்தையும் இப்போ
அமங்கலம்னு நினைச்சு
வெட்டப் பாக்கற,   
               
மனுசனை வெட்டிபுட்டு
மரங்களையும் வெட்டிபுட்டு
மாட்டோட மட்டும் வாழப்போற.
வெட்டு ராசா வெட்டு

ஓட்டையும் கூட
மாட்டுக்கிட்டே  மட்டும்
வாங்கி ஆட்சியையும்
மாட்டுக்காகவே
நடத்திக்கோ ராசா,

மனுசனை ஆள
உனக்கு எப்பவுமே
தகுதியில்லே. ஏன்னா
நீ எப்பவுமே
மனுசனில்லே. 

பின் குறிப்பு : யோகிக்கு நாளை ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன்
 

No comments:

Post a Comment