சில தினங்கள் முன்பாக அலுவலகம்
செல்கையில் என்னைக் கடந்து சென்ற வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த
வாலிபனின் டிஷர்ட்டில் பின்னே கீழ்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது.
நாங்க செத்தாலும்
எங்க ஜாதி சாகாதுடா
சத்ரியன்டா
நடுவிலே அந்த ஜாதி சங்கத்தின் சின்னம்
பொறிக்கப்பட்டிருந்தது. மாற்றம் முன்னேற்றம் என்று போஸ்டர் அடித்து ஒட்டியவருக்கு
சொந்தமான ஜாதி சங்கம்தான்.
அதைப் பார்க்கையில் மிகவும் கவலையாக
இருந்தது. வாலிபர்களை இப்படி தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்களே என்று கோபமும்
வந்தது.
இந்த ஜாதி சங்கங்கள் வெறியூட்டப்படும்
இந்த இளைஞர்களுக்கு என்ன செய்வார்கள் அல்லது இது வரை என்ன செய்திருக்கிறார்கள்?
ஜாதி சங்கத்தலைவர்களும் ஜாதிக்கட்சித்
தலைவர்களும் அடிப்படையில் முதலாளிகள், பலர் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் நடத்தும்
கல்வி வியாபாரிகள்.
தங்களின் வணிக நிறுவனங்களில் வேலை
போட்டுக் கொடுத்துள்ளனரா? தங்கள் கல்லூரிகளில் காசு வாங்காமல் இடம்
கொடுத்துள்ளனரா?
கூட்டங்களில் கலந்து கொள்ள
குவார்ட்டரும் பிரியாணியும் தருவார்கள். கலவரங்கள் செய்யக் கற்றுக் கொடுப்பார்கள்.
தவறாக வழி நடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள். அடுத்தவர்கள் மீது
வஞ்சத்தை வளர்ப்பார்கள். பகைமைத் தீயை மனதில் பற்ற வைப்பார்கள்.
அந்த டி. ஷர்ட் வாசகத்தை பார்த்ததும்
உடனடியாக தோன்றிய எதிர்வினை
அதுதான் இந்த பதிவின் தலைப்பு
எப்பொழுது அவர்களுக்கு புரியும் உண்மை நிலை. சாதி என்ற அவலத்தை பிடித்து கொண்டு எப்படி ஆட்சி கிடைக்கும். தேர்தலுக்கு தேர்தல் பணம் கிடைத்து சுகமாக வாழ்வது தெரிந்து அனைவரும் இந்த கட்சியை ஒதுக்குகின்றனர். தாங்கள் செய்வது அறிவுக்கு புறம்பான செயல் என்று இவர்கள் உணர்வார்கள்? கல்வி எதற்கு இவர்களுக்கு? அடுத்தவரை சமமாக மதிக்காத இவர்கள் யாருக்கு என்ன நல்லது செய்வார்கள்.?
ReplyDelete